விரைவில் ஓட்டுநர் இல்லாப் பேருந்து

ஓட்­­­டு­­­நர் இல்லாத பேருந்­­­து­­­களில் பயணம் செய்ய தயா­­­ராங்­­­குங்கள். நன்யாங் தொழில்­­­நுட்ப பல்­­­கலைக் கழ­­­கத்­­­திற்­­­கும் (என்டியு) அதன் அருகில் இருக்­­­கும் பைனியர் எம்­­­ஆர்டி நிலை­­­யத்­­­திற்கும் இடையே இந்தப் புதிய சேவை சோதனை அடிப்­­­படை­­­யில் அறி­­­மு­­­க­­­மா­­­க­­­வி­­­ருக்­­­கிறது. 'பசுமை பேருந்­­­து­­­கள்' என்று அழைக்­­­கப்­படும் இந்த பேருந்­­­து­­­கள் மின்சாரம்/பெட்ரோலில் ஓடும் வாக­­­னங்கள். தேவை ஏற்­படும்­போது, பேருந்து நிறுத்­தும் இடங்க ளி­லும் பேருந்து பணி­மனை­களி­லும் பேட்­ட­ரி­கள் மின்­னூட்­டப்­படும். இந்த முன்­­­னோட்ட கூட்டு முயற்­­­சி­­­யில் நிலப் போக்­­­கு­­­வ­­­ரத்து ஆணையம், என்­­­டி­­­யு­­­வின் எரி­­­சக்தி ஆய்வுக் கழகம் ஆகியவை இணைந்து செயல்­­­படும். இதற்­­­கான ஒப்பந்த உடன்­­­ப­­­டிக்கை நேற்று கையெழுத்­­­தா­­­னது. சிங்கப்­­­பூர் அனைத்­­­து­­­லக போக்­­­கு­­­வ­­­ரத்து காங்­­­கி­­­ரஸ் கண்­­­காட்­­­சி­­­யில் போக்­­­கு­­­வ­­­ரத்து மூத்த துணை அமைச்­­­சர் இங் சீ மெங் மேற்­­­பார்வை­­­யில் இந்த ஒப்­பந்தம் கையெழுத்­தா­னது.

முன்­னோட்ட அடிப்­படை­யில் சேவையில் இருக்­கும் இரண்டு பேருந்­து­களில் விவேக உணர்வுக் கரு­வி­கள் பொருத்­தப்­படும். அதன் பிறகு தானாக இயங்­கும் உணர்வுக் கருவி உரு­வாக்­கப்­படும். இந்தக் கரு­வி­யால் உள்ளூர் சாலை போக்­கு­வ­ரத்தை­யும் வானிலை நில­வ­ரங்களை­யும் கவ­னித்து பேருந்துகளுக்கு வழிகாட்ட முடியும்.

"அனைத்துலக ரீதியில் தற்போதைய முயற்சிகள் யாவும் கார்கள் மீதே கவனம் செலுத்துவதாக உள்ளது. முதல் முறையாக சிங்கப்­பூ­ரில் அறிமுகமாகிறது இந்த முன்­னோட்ட தானி­யக்க பேருந்து சேவை. இதனால், சாலை பாது­காப்பு மேம்படும், போக்­கு­வ­ரத்து நெரிசல் குறையும், காற்று தூய்மை­கேட்டைத் தவிர்க்க முடி­வ­து­டன் மனி­த­வள சவால்­களைச் சமா­ளிக்க இந்தப் புதிய திட்டம் உதவும்,'' என்றார் என்­டி­யு­ ஆய்வு பிரிவின் துணைத் தலை­வ­ரும் தலைமை நிர்வாகியுமான பேரா­சி­ரி­யர் லாம் கின் யோங். இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூரில் முன்னோட்ட திட்டமாகத் தானியக்க வாக னங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுவதை விரிவுபடுத்தும்.

நேற்று அனைத்துலக போக்குவரத்து காங்கிரஸ் கண்காட்சியில் கலந்துகொண்ட மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் நடமாடும் பாவனைகாட்டியைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!