ஊடக வர்த்தகத்தில் தாக்குப்பிடிப்பதை எஸ்பிஎச் தொடர்ந்து மேம்படுத்தும்

இதர வர்த்தக வாய்ப்புகள் குறித்து குழுமம் கவனித்து வந்தாலும் ஊடகத் துறையின் மூல வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) மேம்படுத்திக் கொண்டிருக்கும் என்று அதன் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் தெரிவித்துள்ளார். நேற்று எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத் தில் டாக்டர் லீ பேசினார்.

“சவால்கள் நிறைந்த சூழல், மாறி வரும் ஊடக வாடிக் கையாளர் தேவைகள் ஆகியவை இருந்தாலும் நாளிதழ் துறையின் மூல வர்த்தகத்தைத் தொடர்ந்து முன்னணியில் வைத்திருப்பதே குழுமத்தின் இலக்கு. ஊடகத் துறையினருட னும் ஊடகம் அல்லாத துறையினருடனும் எஸ்பிஎச் கொண்டிருக்கும் நட்புறவு தொடர்ந்து வலுப்படுத்தப்படும்,” என்றும் அவர் சொன்னார். எஸ்பிஎச் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 400க்கு மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்

குடிபோதையில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அலிஃபை மடக்கிப் பிடித்து கைது செய்த போலிசார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக்

12 Nov 2019

குடிபோதையில் வாக்குவாதம்: பாடகர் அலிஃப் அசிஸ் கைது