வில்சன் ராஜ் பெருமாளை சுற்றி இறுகும் பிடி

ஆட்டக்காரர்களுக்குப் பணம் கொடுத்து காற்பந்து ஆட்டங் களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் குற்றத்தைப் பல நாடுகளில் புரிந்ததாக நம்பப்படும் வில்சன் ராஜ் பெருமாள் ஹங்கேரி யில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். சிங்கப்பூரரான வில்சன் ராஜ் கூடிய விரைவில் விடுவிக்கப்பட லாம் என்று செய்திகள் வெளி யாகி உள்ளன. அதனைத் தொடர்ந்து அவர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆட்டக்காரர்களுக்குப் பணம் கொடுத்து அனைத்துலக அளவில் கிட்டத்தட்ட 100 ஆட்டங்களின் முடிவை முன் கூட்டியே நிர்ணயித்த குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படும் 51 வயது வில்சன் ராஜ் பெருமாள், 2012ஆம் ஆண்டிலிருந்து சாட்சிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹங்கேரி தலைநகர் புடா பெஸ்ட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹங்கேரியில் இருக்கும் வில்சன் ராஜ் பெருமாள் (இடது). அவருடன் இருக்கும் பெண் அவரது மனைவி என்று நம்பப்படுகிறது. படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!