மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்திடக்கூடும்

சிங்கப்பூரின் பொருளியல் நான்காம் காலாண்டில் வளர்ச்சி கண்டு, பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், பதவி ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தால் உலகளாவிய வர்த்தகம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் வருங்காலம் தெளிவின்றி இருக்கிறது. இவ்வாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப் படையில் முந்திய காலாண்டைவிட 3.7% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் தொழிற்சாலை உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்குக் காரணம் என ராய்ட்டர்ஸ் ஆய்வின் இடைநிலை முன்னுரைப்பு கூறுகிறது.

மூன்றாம் காலாண்டின் 2.0% சரிவுக்குப் பிறகு நான்காம் காலாண்டில் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டாலும், வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் பொருளியலின் வருங்காலக் கண் ணோட்டத்தில் ஆய்வாளர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். நான்காம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்னோட்டக் கணிப்பை ஜனவரி 3ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அரசாங்கம் வெளியிடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!