கைபேசி மூலம் வரி செலுத்தலாம்

அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருமான வரி செலுத்தும் பருவத்தை முன்னிட்டு வரி செலுத்துவோரின் மேம்பட்ட சௌகரியத்துக் காக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் ஒன்று திறன்பேசி வழி வரியைச் செலுத்துவது. இவ்வாண்டு வரி செலுத்துவதற்கும் வரி செலுத்திய விவரங்களைப் பார்ப்பதற் கும் சிங்பாஸ் '2FA' எனும் இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சம் தேவைப்படும். வரி செலுத்துவோர் இம்மாதத்திற்குள் அதைப் பதிவு செய்து செயல்படுத்தினால்தான் மார்ச் மாதம் முதல் வரி செலுத்தத் தயாராக இருக்க முடியும் என்று ஐராஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வரி செலுத்திய விவரங்களையும் வரிக் கணக்குகளின் சுருக்கத்தையும் பார்க்க உதவும் வசதிகளும் 'myTax Portal' இணைய வாசலில் இடம்பெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!