சுங்கை ரோடு சந்தையின் இறுதி நாள் ஜூலை 10ஆம் தேதி

பழைய பொருட்களை விற்கும் சுங்கை ரோட்டின் 80 ஆண்டு கால வரலாறு இந்த ஜூலை மாதம் முடிவுக்கு வருகிறது. பல அமைப்புகள் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், சுங்கை ரோடு ஜூலை 10ஆம் தேதியுடன் மூடப்படும் என்று தெரிவித்தது. அந்தப் பகுதியில் குடியிருப்புகள் உருவாக்கப்பட உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் மறுசீரமைக்கப்படலாம் என அறியப்படுகிறது. தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய வளர்ச்சி அமைச்சு, சமு தாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, தேசிய மரபுடைமைக் கழகம், சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவை இணைந்து அந்த அறிக்கையை வெளியிட்டன.

பழைய பொருட்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை வாடிக்கையாளர்கள் கண்ணோட்டமிடுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!