பிரதமர் லீ தாயார் பெயரில் சட்டக்கல்லூரி நூலகம்

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சட்ட நூலகத்திற்கு சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் துணைவியாரும் வழக்கறிஞருமான திருவாட்டி குவா கியோக் சூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் லீ சியன் லூங் அந்தப் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரிக் கட்டடத்தையும் அதிலுள்ள குவா கியோக் சூ சட்ட நூலகத்தையும் அதிகாரபூர்வ மாகத் திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் லீ, "ஒரு சட்ட நூலகத்துக்குத் தமது பெயர் வைக்கப்பட்டிருப்பதை அறிந்து தமது தாயார் பெருமைப் பட்டிருப்பார்," என்றார். தமது தாயார், அவரது மாண வர்களுக்கு ஒரு நல்ல, அமைதி யான மதியுரைஞராக இருந்ததை யும் சிங்கப்பூரில் வேலை- வாழ்க்கை சமநிலையை 1980களி லேயே நடைமுறைக்குக் கொண்டு வந்த முன்னோடி என்பதையும் நினைவுகூர்ந்தார் திரு லீ.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் புதிய சட்டக்கல்லூரி கட்டடத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்த பிரதமர் லீ சியன் லூங் (வலது) அங்கு தமது தாயார் குவா கியோக் சூவின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள தமது பெற்றோரின் புகைப்படத்தைப் பார்வையிடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!