பல சமய புரிந்துணர்வு தேவை

சுதாஸகி ராமன்

பிற சமயங்களின் மரபுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதன் மூலம் சிங்கப்பூரர்களிடையே புரிந் துணர்வு அதிகரிக்கும் என்றும் இது ஏற்படுத்தும் பரஸ்பர ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யீ காங் வலியுறுத்தியுள்ளார். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலின் முருகப் பெருமானுக்கு பால்குடங் கள், காவடிகள் ஆகியவற்றைச் சுமந்த பக்தர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், இதனை தமிழ் முரசிடம் பிறகு தெரிவித்தார்.

"செம்பவாங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத் திற்கு அருகிலே பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. செம்பவாங்கில் சமயங்களின் வளமையோடு சிங் கப்பூரின் சிறப்பையும் இது பிரதி பலிக்கிறது," என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார். ஆலயத்தில் தொடர்ந்து நடக் கும் புதுப்பிப்புப் பணிகளின் ஓர் அங்கமாக ஆலய வளாகம் விரி வாக்கம் செய்யப்பட்டு மண்டபம், சந்திப்பு அறைகள் உள்ளிட்ட கட்டடம் ஒன்றும் அருகிலே கட்டப் பட்டு உள்ளது. இதையும் அமைச் சர் பார்வையிட்டார். வார இறுதி நாளாக இருந்ததால் வழக்கத்தைவிட அதிகமான சுமார் 7,000 பக்தர்கள் நேற்று பங்குனி உத்திர வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு புனிதமரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலுக்குப் பால்குடங்கள், காவடிகள் சுமந்து கடவுளுக்கு நேர்த்திக்கடன்களைச் செலுத்திய பக்தர்கள். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!