உலகளாவிய இணையத் தாக்குதல்: தியோங் பாரு பிளாசா பாதிப்பு

தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியின் மின்னிலக்க விவரப் பதிவு பிணைத் தொகை கேட்கும் மென்பொருளால் தாக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து உலகெங்கும் உள்ள பல கணினிகள் இந்த இணையத் தாக்குதலால் முடங்கியுள்ளன. நேற்று மாலை 5 மணி அளவில் இணையத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததாக தியோங் பாரு பிளாசா கடைத்தொகுதியின் நிர்வாகம் தெரிவித்தது. கடைத்தொகுதியின் மின்னிலக்க விவரப் பதிவு தனியார் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இணையத் தாக்குதலால் கடைத்தொகுதியின் ரகசிய விவரங்கள் ஏதும் கசியவில்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.