சமய போதகரின் நூல்களில் பயங்கரவாத கருத்துகள்

பதிவு செய்யப்படாத சமய போதகர் ஒருவர் வெளியிட்ட ஒன்பது நூல்­களில் பயங்கரவாதச் சமய கருத்து­ ­கள் இடம்பெற்றிருந்ததால் விரும்­பத்த­காத வெளியீடுகள் சட்டத்தின்­கீழ் அந்த நூல்கள் தடைசெய்யப்­பட்டுள்ளன. அப்படியென்றால் அந்த நூல்­களை விநியோகிப்பதோ வைத்தி­­ ருப்பதோ குற்றமாகும். அந்த நூல்­களை வைத்திருப்போர் அவற்றை போலிசிடம் ஒப்படைக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அப­ராதம், சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சிங்கப்பூரரான ரசூல் டஹ்ரி வெளியிட்ட அந்த நூல்களில் மற்ற சமயத்தினரை இழிவு­படுத்தும் பயங்கரவாதச் சமயக் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று தெரிவித்தது.

அவற்றில் திரு ரசூல் சமயச் சார்பற்ற அரசியல் சிந்தனையை நிராகரிப்பதுடன் முஸ்லிம்கள் இஸ்லா­மிய அரசை அமைக்க வேண்டுகோள் விடுத்ததாக அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது. பல்வேறு சமயக் குழுக்களிடை­யே பகைமையையோ வன்முறையை­யோ தூண்டும் தனிநபர்கள் அல்­லது நூல்களை சிங்கப்பூர் சிறிது அளவும் சகித்துக்கொள்ளாது என் பதை அமைச்சு வலியுறுத்தியது. இதனாலேயே அந்த நூல்கள் தடைசெய்யப்­பட்டுள்ளன. "பல கலாசார, பல இன சமுதா­யமாக சிங்கப்பூர் கொண்டிருக்கும் பண்புநெறிகளைப் பயங்கரவாதச் சித்தாந்தங்களைத் தூண்டக்கூடிய ரசூல் டஹ்ரியின் போதனைகள் நிராகரிக்கின்றன," என்று தொடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தமது அறிக்­கையில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!