கடற்கரையில் எண்ணெய்த் திட்டுக்கள் அப்புறப்படுத்தப்பட்டன

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் படிந்திருந்த எண்ணெய்த் திட்டுக்களை தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அப்புறப் படுத்தியது. துப்புரவுப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை அருகே உள்ள எஃப்2 கார்பேட்டை மற்றும் போகெய்ன்வில்லே கார்டன் மக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் நேற்று மாலை 5 மணிக்கு திறந்துவிடப்பட்டது. இதனை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது வலைத்தளத்தில் தெரிவித்தது.