வேலையிட மரணங்கள் 2018ல் சற்று குறைவு

வேலையிட மரணங்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டு சற்று குறைந்து 41 மரணங்கள் ஆனது. இது 2017ம் ஆண்டின்  எண்ணிக்கையான 42 மரணங் களைவிட ஒன்று குறைவு.

இந்த எண்ணிக்கை ஒரு புதிய சாதனையாகக் கருதப்படு கிறது என்று மனிதவள அமைச் சும் வேலையிடப் பாதுகாப்பு மற் றும் சுகாதார மன்றமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன. வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 2006ஆம் ஆண்டில் அறிமுகமானதில் இருந்து வேலையிட மரணங்க ளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

2006ஆம் ஆண்டில் 3.1  புள்ளியாக இருந்த வேலையிடத்தின் மரணத்தை விளைவித்த காயங்களின் விகிதம் 2018ஆம் ஆண்டில் 1.2 புள்ளியாகக் குறைந்தது. இந்த வித்தியாசம் 60 விழுக்காட்டுக்கும் அதிகம். 

பாதுகாப்பு விளைவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரங்கள், கடுமையான தண்டனைகள், தொழில்துறைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விரிவான விளக்கங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் ஒவ்வொரு நிறுவனமும் அதன் பாதுகாப்பு விளைவு களுக்குப் பொறுப்பேற்க வைத்த அணுகுமுறையினால்தான் இந்த மேம்பாடுகளைச் சாதிக்க முடிந்தது என்று அறிக்கையில் கூறப் பட்டது.