$278,200ஐ கையாடல் செய்த ஹவ்காங் யுனைடெட் பெண் ஊழியர்மீது குற்றச்சாட்டு

ஹவ்காங் யுனைடெட் காற்பந்து சங்கக் கட்டடத்தில் $278,200 பணத்தைக் கையாடல் செய்ததன் தொடர்பில் அங்கு துணை நிர் வாகிப் பொறுப்பில் பணிபுரிந்து வந்த டியன் டாய் டீ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சங்கக் கட்டடத்தின் இயக்கத் திற்கான அப்பணம், சென்ற ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை மலேசியரான டியனால் கையாடல் செய்யப்பட்டது. 
இதைத் தொடர்ந்து நம்பிக்கை மோசடிக்காக டியன் டிசம்பர் 16ஆம் தேதியன்று கைது செய்யப் பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 
டியனின் பிணைத் தொகை $100,000ஆக உள்ள நிலையில், மீண்டும் அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று அவரின் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் டியனுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். 
இதன் தொடர்பில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்திற்கும் (எஃப்ஏஎஸ்) தகவல் தெரிவிக்கப் பட்டது.

வழக்கு விசாரணையில் உள்ளதால் இதற்கு மேல், விவரங்கள் ஏதும் வெளியிட முடியாது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் ஹவ்காங் யுனைடெட் கூறியது.
‘எஃப்ஏஎஸ்’ இவ்விவகாரம் தொடர்பில் ஹவ்காங் யுனைடெட் சங்கத்துடன் பல விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
ஒன்பது சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துச் சங்கங்களில், ஹவ்காங் யுனைடெட் உள்பட ஆறு சங்கங்கள் தங்களின் கட் டடங்களில் ஜாக்பாட் இயந்திரங் களை இயக்கி வருகின்றன.
ஜாக்பாட் விளையாடி வெல் பவர்களுக்கு ரொக்கமாகப் பணம் தருவதற்கென அந்தந்தச் சங்கங் கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை வைத்திருக்கும்.
அண்மைய ஆண்டுகளில் அரசாங்கம் இதுபோன்ற இயந் திரங்களை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அத்துடன் நாட்டில் இதுபோன்ற இயந்திரங்களைக் குறைக்கும் நோக்கில் உள்துறை அமைச்சும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.