‘பிடிஓ’ வீட்டுத் தேர்வு காலம் மூன்று வாரங்களாகக் குறைக்கப்படுகிறது         

தேவைக்கேற்ப கட்டித்தரும் வீடு (பிடிஓ) வாங்குபவர்கள் தங்கள் வீடு பற்றிய தகவல்களை விரைவில் பெறவிருக் கிறார்கள். பிடிஓ வீட்டுத் தேர்வுக்காகக் காத்திருக்கும் காலம் ஆறு வாரங்களிலிருந்து மூன்று வாரங்களாகக் குறைக்கப்படுகிறது. 
மேலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தங்கள் புதிய வீடமைப்பு விற்பனைத் திட்டங்கள் பற்றி முன்கூட்டியே அதாவது ஆறு மாதங்களுக்கு முன்னரே மக்களுக்குத் தெரிவித்துவிடும். முன்பு அது மூன்று மாதமாக இருந்தது.
நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், இந்த நடவடிக்கைகள் வீட மைப்பை சிங்கப்பூரர்களுக்கு கட்டுப்படியாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க உதவும் என்றார்.
இந்த இரு மாற்றங்களும் வரும் மே மாத வீடு விற் பனை நடவடிக்கையிலிருந்து அமலாகும். பிடிஓ தொடர்பான விற்பனைத் திட்ட அறிவிப்பின் விரிவாக்கம் வீட்டு வாங்கு பவர்களுக்கு விரைவில் வரவிருக்கும் திட்டங்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கு வழி வகுக்கும் என்று அமைச்சர் வோங் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது விளக்கினார்.