தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள்: சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ்

1 mins read
a06f088d-0353-43da-8c19-6cd0473ccd60
-

சிங்கப்பூர், ஹாங்காங், பாரிஸ் ஆகியவை உலகிலேயே வசிப்பதற்கு ஆகச் செலவுமிக்க நகரங்கள் என்று அண்மை ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. பொதுப் பயனீடு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான கட்டணங்கள் அந்நகரங்களின் வாழ்க்கைச் செலவினத்தை வெகுவாக அதிகரிப்பதாக 'தி இகானமிஸ்ட்' சஞ்சிகை வெளியிட்ட அந்த ஆய்வு கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வில் 133 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நகரங்களுக்கு அடுத்தடுத்த நிலைகளில் ஸுரிக், ஜெனீவா, ஜப்பானின் ஒசாக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிகமான பணவீக்கம், பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் இஸ்டான்புல், மாஸ்கோ ஆகிய நகரங்களின் தரவரிசை நிலை குறைந்துள்ளது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக இந்தப் பட்டியலின் முதல் இடத்தை மூன்று நகரங்கள் ஒரே நேரத்தில் பிடித்துள்ளன என்று ஆய்வைத் தயாரித்த ரொக்ஸானா ஸ்லாசேவா தெரிவித்தார்.

இந்த ஆய்வில் 400க்கும் அதிகமான பொருட்களின் விலைகள் ஒப்பிடப்பட்டன. உணவு, பானம், உடை, வீட்டுப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், தனியார் பள்ளிகள், உல்லாச நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன.