உள்துறைக்குழு தேசிய சேவையாளர்களுக்கு  மேலும் ஊக்குவிப்புகள்

சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு தேசிய சேவையாளர்கள் ஆற்றி இருக்கும் தொண்டுகளைக் குறிக்கும் வகையில் உள்துறைக் குழு தேசிய சேவையாளர்களுக்கு  மேலும் பல ஊக்குவிப்புகள் கிடைக்க இருக்கின்றன. 
தேசிய சேவை உள்துறைக் குழுவின் தலைவர் ஜோசஃபின் டியோ இதனைத் தெரிவித்தார். 
கெத்தே திரையரங்கில் வார முடிவில் திரைப்படம் பார்ப்பதற் கான நுழைவுச் சீட்டுகள், அதிர்ஷ்ட குலுக்கில் ஸ்கோடா கார் ஒன்றைப் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவை அந்த ஊக்கு விப்புகளில் அடங்கும். 
தேசிய சேவையாளர்கள் தங்க ளுடைய உறுப்பியத்தைப் புதுப் பிக்கும்போது இந்த வாய்ப்பு களைப் பெறலாம்.
தேசிய சேவை உள்துறைக் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி டியோ, அந்தச் சங்கத்தின் ஆறா வது மனமகிழ் மன்றத்தை அமைப்பதற்கான பணிகள் இந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங் கும் என்றும் தெரிவித்தார். 
அடுத்த 10 முதல் 15 ஆண் டுகளில் மூன்று புதிய மனமகிழ் மன்றங்கள் கட்டப்படும். அவற் றில் பிடோக் மனமகிழ் மன்றம் ஒன்று. 
சிறந்த தொண்டாற்றி வருவ தற்காக தேசிய சேவையாளர் களுக்கும் அவர்களுடைய குடும் பத்தாருக்கும் திருவாட்டி டியோ நன்றி தெரிவித்தார். 
“நீங்கள் உங்கள் சக சிங்கப் பூரர்களுக்கு ஆற்றும் தொண் டுக்கு ஈடு இணையே இல்லை,” என்று மனிதவள அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்ச ருமான திருவாட்டி டியோ கூறி னார்.