‘சோதனைச் சாவடிகளில் நிலவும் நெரிசலால் மலேசிய சுற்றுப்பயணத்துறைக்குப் பாதிப்பு’

மலேசியாவிற்கு சிங்கப்பூரர்களின் வருகை குறைந்ததற்கு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலே காரணம் என்று மலேசியா குறைகூறுகிறது.
சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10.2 மில்லியனாக குறைந்தது என்று மலேசியாவின் சுற்றுப்பயண, கலை, கலாசார துறை துணை அமைச்சர் முகம்மது பாக்தியார் வான் சிக் நேற்று முன்தினம் தெரிவித்தார். 2017ல் அது 12 மில்லியனாக இருந்தது.
“சிங்கப்பூர் சோதனைச் சாவடி களில் நிலவும் நெரிசலால் அவற் றைக் கடக்க மக்கள் மணிக்கணக் காக காத்திருக்க வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார். பள்ளி விடுமுறை காலத்தில் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரி சல் நிலவுவது குறித்து அண் மையில் செய்திகள் வெளியானதை அவர் சுட்டினார். போக்குவரத்து மற்றும் வாகனம் தொடர்பான குற் றங்களுக்காக அபராதங்களைச் செலுத்த தவறிய ஓட்டுநர்களுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி மறுக் கப்பட்டதையும் அவர் கோடிக் காட்டினார். சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண் ணிக்கை குறைந்திருப்பதால் தங் களது வியாபாரம் பெரிதும் பாதிக் கப்பட்டிருப்பதாக ஜோகூரின் உணவு, பானத் துறையினர் கவலை தெரிவித்திருந்தனர். 
குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நிலவும் நெரிசல் ஒரு பக்கம் இருக்க, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நிலவும் நெருக்கடியாலும் சிங்கப்பூரர்கள் பலர் மலேசியாவுக்குச் செலவதைத் தவிர்த்துக்கொள்வதாக ஜோகூர் வர்த்தகங்கள் புலம்புகின்றன.
சிங்கப்பூர் ஏர்லைன்சும் பயண முகவர்களும் சிறப்புச் சலுகை வழங்குவதாலும் மக்கள் மலேசியா விற்குப் பதிலாக மற்ற நாடுகளுக் குச் செல்ல எண்ணுகின்றனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon