$100,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல், அறுவர் கைது

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று முன்தினம் மாலை $100,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அறுவர் கைது செய்யப்பட்டனர். தஞ்சோங் பகார், அப்பர் பூன் கெங், பீஷான் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு நடவடிக்கைகளில் சிங்கப்பூரர்களான அவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘ஐஸ்’ கஞ்சா, செயற்கை கஞ்சா, ஹெராயின் எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின் 5 மாத்திரைகள், கெடமைன், போதைப் பயன்பாட்டு உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

இப்பகுதியில் மேலும் செய்திகள்