சுடச் சுடச் செய்திகள்

தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு ஜூலையில் தொடக்கம்

2020ஆம் ஆண்டில் தொடக்கநிலை ஒன்றில் சேரும் பிள்ளைகளுக்கான பதிவு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பிள்ளைகளுக்காகப் பதிவு செய்ய விரும்பும் பெற்றோர் வார நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் தொடக்கப்பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று கல்வியமைச்சு கூறியது.

2013ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் இடையே பிறந்த பிள்ளைகள் அடுத்தாண்டு தொடக்கப்பள்ளி ஒன்றாம் வகுப்பையில் சேர அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படவேண்டும். தொடக்கப்பள்ளிகளின் பட்டியல், ஒவ்வொரு பள்ளியில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் கல்வியமைச்சின் இணையத்தளத்தை நாடலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon