சூரிய சக்தி பயன்பாட்டைத் துரிதப்படுத்த முயற்சி

சிங்கப்பூரின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் 2030ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி பெரிய பங்காற்றும். ஆனால், படிம எரிபொருளான (fossil fuel) இயற்கை எரிவாயு, குறுகிய காலகட்டத்தில் எரிசக்தி தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுங் சிங் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பாற்றல் (geothermal) அல்லது காற்றாழை மூலம் மின்சாரம் தயாரிப்பது போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறையைப் பயன்படுத்த சிங்கப்பூருக்கு வரம்பு இருப்பதாக அவர் கூறினார். சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றியபோது திரு சான் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை சிங்கப்பூர் துரிதப்படுத்தும். 2030ஆம் ஆண்டிற்குள் சூரிய சக்தி ஆற்றலைத் தற்போதைய அளவைவிட ஏழு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில் அதிக செலவினம் உள்ளிட்ட சவால்கள் உள்ளன.

“எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்த 50 ஆண்டுகளுக்கு இயற்கை எரிவாயுவை நாங்கள் தொடர்ந்து சார்ந்திருப்போம்,” என்றார் அமைச்சர் சான்.

சிங்கப்பூரின் எரிசக்தி தேவையில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானது இயற்கை எரிவாயு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனீசியாவிலிருந்து இயற்கை எரிவாயுவை சிங்கப்பூர் பெறுகிறது.

தூய்மையான, கட்டுப்படியாகக் கூடிய, நம்பகத்தன்மையுடைய எரிசக்தி பயன்பாட்டை நோக்கி சிங்கப்பூர் செல்கிறது என்று திரு சான் கூறினார். எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் எண்ணெயிலிருந்து இயற்கை எரிவாயுவுக்கு சிங்கப்பூர் ஏற்கெனவே மாறிவிட்டதாக அவர் சொன்னார்.

இனி, சூரிய சக்தி பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும் இயற்கை எரிவாயு ஆலைகளை மேலும் ஆக்கபூர்வமாக்குவதிலும் சிங்கப்பூர் கவனம் செலுத்தும்.

இயற்கை எரிவாயுவே ஆகத் தூய்மையான படிம எரிபொருள். டீசலுடன் ஒப்பிடும்போது இயற்கை எரிவாயு 30 விழுக்காடு குறைவான அளவு கரியமிலவாயுவை வெளியிடுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆனால், இயற்கை எரிவாயுவில் அதிகளவு மீத்தேன் இருப்பதால், எரிசக்தி உற்பத்திக்காக அது எரிக்கப்படுவதற்கு முன்னர் அந்த எரிவாயு கசிந்தால், சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும். மீத்தேன் கசிவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 0.39 விழுக்காடு அளவு மட்டுமே மீத்தேன் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பூமியில் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் கரியமிலவாயுவைவிட மீத்தேன் 28 மடங்கு அதிகம் ஆற்றல் கொண்டது என பருவநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கக் குழு வெளியிட்ட ஆக அண்மைய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!