புத்தாக்க வழிகளில் தாய்மொழி ஆற்றல்களை வளர்த்தல்

தங்கள் பிள்ளைகள் தாய்மொழி யில் சிறந்து விளங்க பெற்றோர்கள் சில புத்தாக்க வழிகளைக் கையாள்கிறார்கள்.

விடுமுறைக்கு அழைத்துச் செல்லுதல், இணையத்தில் தாய் மொழியைப் போதித்தல், பாரம்பரிய சமையலில் பிள்ளைகளையும் ஈடு படுத்துதல், தாய்மொழிப் பாடல் களை ஒலிப்பதிவு செய்தல் என்று பலதரப்பட்ட வழிகளைப் பெற்றோர் கள் கடைப்பிடிக்கிறார்கள்.

துணைப் பாட வகுப்புகள், நிகழ்ச்சி ஏற்பாடு, நிறுவனப் பயிற்சி போன்ற சேவைகளை வழங்கி வரும் எலிமந்த்ரா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யான டாக்டர் எல்மி ஸுல்கர்னைன் ஒஸ்மான், “தாய்மொழிக் கற்பித்தல் வீட்டிலிருந்து தொடங்குவதே சிறந்த பலன்களைக் கொடுக்கும்,” என்கிறார்.

அவர், பாலர் பள்ளிக்குச் செல்ல லும் தமது இரு மகன்களிடம் வீட் டில் மலாய் மொழியில் பேசுகிறார். மற்ற இடங்களில் ஆங்கிலம் புழக்க மொழியாக இருப்பதால் அவர் அதைப் பிள்ளைகளிடம் பயன் படுத்துவதில்லை.

மாறாக, டாக்டர் எல்மியின் மனைவி பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

கடந்த மாதம் பிரதமர் லீ சியன் லூங் மாண்டரின் பேசுங்கள் இயக்கத்தின் 40ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், இளம் பிள்ளைகளைக் கொண்ட சிங்கப்பூர் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சுட்டினார்.

கல்வி அமைச்சின் தகவலை மேற்கோள் காட்டிய பிரதமர், “தொடக்கநிலை ஒன்றில் பயிலும் பிள்ளைகளைக் கொண்ட 71 விழுக் காட்டு சீனக் குடும்பங்கள் வீட்டில் ஆங்கிலத்தையே அதிகம் பயன் படுத்துகிறார்கள். இருபது ஆண்டு களுக்கு முன்பு அந்த விகிதம் 42%ஆக இருந்தது.

“இதேபோன்ற நிலைதான் மற்ற பிரதான இனவாரி சமூகங்களுக் கும். மலாய் குடும்பங்களில் இப் போது இந்த விகிதம் 67% ஆக இருக்கிறது. இருபது ஆண்டு களுக்கு முன் இந்த விகிதம் 18% ஆக இருந்தது. இந்தியக் குடும்பங் களில் 70 விழுக்காட்டினர் வீட்டில் ஆங்கிலத்தை அதிகம் புழங்கு கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் இந்த விகிதம் 55% ஆக இருந்தது,” என்று விவரித்தார்.

பெற்றோர் பயன்படுத்தும் புத் தாக்க முறைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

சிங்கப்பூர் சீன கலாசார நிலை யத்தின் இயக்குநரான 54 வயது திரு லீ ஈ வர்ன், மின்னிலக்கச் சாதனங்கள் மூலம் தமது ஐந்து வயது மகளுக்கு சீன வாக்கியங் களைக் கற்றுக்கொடுக்கிறார்.

தமிழ் துணைப் பாட வகுப்பு ஆசிரியரான திருமதி ஹேமலதா ரமேஷ், 44, தமது ஆறு வயது மகள் கரிஷ்மாவை கைபேசியில் தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து அதில் உள்ள உச்சரிப்புகள் பற்றி விளக்கு கிறார்.

“தங்கள் சொந்தக் குரலைக் கேட்கும்போது பிள்ளைகள் மகிழ்ச்சியடைகிறார்கள். பாடலைப் பாட நான் என் மகளை வற்புறுத்து வதில்லை. அவரே தானாகப் பாட லைப் பாடிக் கேட்பார்,” என்றார்.

திரு லீ தம் குடும்பத்தாரைச் சீனாவுக்கு அழைத்துச் செல்லும் போது அங்கு மாண்டரின் மொழி புழக்கமே பிரதானமாக இருப்பதால் அதன் தாக்கம் நல்ல பலனைப் பிள் ளைகளுக்குத் தருகிறது என்றார்.

வீட்டில் அதிகமாக மலாய்மொழி யைத் தங்களின் உரையாடலில் பயன்படுத்துவதை டாக்டர் எல்வி கடைப்பிடிக்கிறார்.

வீட்டில் தமது மகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அவ ருக்கு அதிகம் தமிழ் பேசும் சூழலை ஏற் படுத்திக் கொடுக்கும் வகையில் மகளை சிண்டாவின் பாலர் பள்ளி தமிழ் செறிவூட்டல் வகுப்புகளில் சேர்த்துள்ளார்.

“தமிழ் பேசும் மற்ற பிள்ளைகளு டன் இருக்கும்போது தமிழ்மொழி புழக்கம் அதிகமாகிறது,” என்று கூறும் திருமதி ஹேமலதா, வீட்டில் பாரம்பரிய உடைகள், உணவு வகை கள், நகைகள், நடனங்கள், மூலி கைகள் மூலமும் தமிழ் மொழியைத் தம் மகளுக்குப் போதிக்கிறார்.

இதனால் தம் மகள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளும் அதேவேளை யில், தமிழ் கலாசாரம், மரபுடைமை, கலைகள், சமையல் என்று பல வழி களிலும் தமிழ்மொழி தொடர்பான பல அம்சங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டுகிறது,” என்று பெருமிதத்து

டன் கூறினார் மூன்று பிள்ளை களுக்குத் தாயாரான ஹேமலதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!