நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

2 mins read
d6625ce9-4a7f-4a49-b0dc-18b402c07f3f
தெலுக் குராவ் ரோட்­டில் உள்ள மருந்­த­கத்­தில் நோயா­ளி­க­ளின் வெப்­ப­நிலை பரி­சோ­திக்­கப்­ப­டு­வதை பிப்­ர­வரி 18ஆம் தேதி எடுக்­கப்­பட்ட இந்­தப் படம் காட்­டு­கிறது. நட­மாட்­டக்­கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­வர்­கள் இனி முகக் கவ­சம் அணிந்து மருத்­துவ சிகிச்­சைக்­குச் செல்ல வேண்­டும் என்று நேற்று புதிய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. படம்: லியான்ஹ சாவ்­பாவ் -

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நாள்­தோ­றும் புதுப் புது கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஏற்­கெ­னவே உள்ள கட்­டுப்­பாடு­களும் பரி­சீ­லிக்­கப்­பட்டு வலுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில் நேற்று புதிய கட்­டுப்­பாடு ஒன்று அறி­விக்­கப்­பட்­டது.

வீட்­டிலேயே தங்கியிருக்கும் உத்­த­ரவு உள்­ளிட்ட நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­வர்­கள் இனி மருத்­துவ சிகிச்­சைக்­காக வெளியே சென்­றால் கட்­டா­யம் முகக்­க­வ­சத்தை அணிய வேண்­டும்.

கொரோனா கிருமி தொற்­றி­யி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் சிகிச்­சைக்கு வெளியே சென்­றாலோ அல்­லது அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்கு வெளியே சென்­றாலோ முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என்று நேற்று சுகா­தார அமைச்சு கூறியது.

தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் இந்­தக் கட்­டுப்­பாட்டை அமைச்சு அமல்­ப­டுத்­தி­யுள்­ளது.

வீட்­டிலேயே தங்கியிருக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் தீவிர சுவா­சச் கோளாறு கார­ண­மாக மருத்­து­வ­ரி­ட­மி­ருந்து ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு பெற்­ற­வர்­களும் சிகிச்­சைக்­காக வெளியே செல்­லும்­போது முகக் கவ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லது கிரு­மி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் நேரடி தொடர்­பில் இருந்­த­வர்­கள் அல்­லது கிரு­மி தொற்­றி­யி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் மருத்­து­வ­ம­னை­யிலோ அல்­லது வேறொரு இடத்­திலோ தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களும் புதிய கட்­டுப்­பாட்­டின் கீழ் வரு­கின்­ற­ னர்.

அது மட்­டு­மல்­லா­மல் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் தங்களுக்கு விதிக்­கப்­பட்­டவர்கள் அது குறித்து தங்களின் முத­லா­ளி­க­ள் அல்­லது பள்­ளிக்­கு தெரி­விக்க வேண்­டும்.

உணவு விநி­யோ­கிப்­பா­ளர்­கள் அல்­லது அத்­தி­யா­வ­சியப் பொருள் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் தவிர தங்­கி­யி­ருக்­கும் இடத்­தில் மற்­ற­வர்­க­ளு­டன் நேரடி தொடர்பு கொள்­வ­தை­யும் அவர்­கள் தவிர்க்க வேண்­டும். இந்த விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­த­வர்­க­ளுக்கு 10,000 வெள்ளி வரை அப­ராா­தம் அல்­லது ஆறு மாதச் சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கடந்த வாரம் தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் மற்­றோர் உத்­த­ரவை சுகா­தார அமைச்சு பிறப்­பித்­தி­ருந்­தது. தீவிர சுவா­சக் கோளாறு கார­ண­மாக மருத்­து­வ­ரால் ஐந்து நாள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­ட­வர்­கள் சிகிச்­சைக்­குத் தவிர வேறு எதற்­கும் வீட்­டி­லி­ருந்து வெளியே­ செல்லக்கூடாது என்று அது உத்­த­ரவு பிறப்­பித்­தது.