சிங்கப்பூரில் அரையாண்டு தேர்வுகள் ரத்து; தேசிய அளவிலான தேர்வுகள் இடம்பெறும்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்துள்ளார்.

அதே வேளையில், பள்ளிகள் மூடப்பட்டாலும் தேசிய அளவிலான தேர்வுகள் முக்கியமானவையாகக் கருதப்படுவதால் அவை தொடர்ந்து நடத்தப்படும் என்று அமைச்சர் ஓங் சொன்னார். ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ள வாய்மொழி, தாய்மொழிப் பாடத் தேர்வுகளும் அதில் அடங்கும் என்றும் திட்டமிட்டபடி அவை நடைபெறும் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

“அந்தத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமல்ல. பாதுகாப்பான இடைவெளியுடன் அவர்கள் அமர வைக்கப்படுவர்,” என்றார் திரு ஓங்.

அத்துடன், ஆண்டிறுதியில் இடம்பெறும் தொடக்கநிலை இறுதித் தேர்வு (பிஎஸ்எல்இ), ‘ஓ’ நிலை, ‘என்’ நிலை, ‘ஏ’ நிலைத் தேர்வுகள் குறித்து இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

கல்வி அமைச்சு நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க இணையவழிப் பாடங்களுக்கு மாறும் என்றும் அமைச்சர் ஓங் அறிவித்துள்ளார். தேர்வுகள், இணையவழி வீட்டுப்பாட ஒப்படைப்புகளாகத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, வரும் 8ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்தார்.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையிலான மாணவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை வீட்டில் இருந்தவாறே பாடங்களைக் கற்பர் என்று கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அனைத்து பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் மூடப்படும் என்றும் அதே நேரத்தில் வேலைக்குப் போக வேண்டிய நிலையிலுள்ள, வேறு பராமரிப்பாளர்களைத் தேட முடியாத பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளுக்காக மட்டும் சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்க வகைசெய்ய வேண்டும் அல்லது வகுப்புகளைத் தற்காலிகமாக ரத்து செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதைய அறிவிப்பின்படி மே 5ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆயினும், கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கொரோனா கிருமித்தொற்று நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்யும்.

பள்ளிகளை மூடுமாறு பெற்றோர்கள் பலரும் ஏற்கெனவே தம்மிடம் வேண்டுகோள் விடுத்ததாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் ஓங் யி காங், இப்போதுதான் அதற்குச் சரியான நேரம் வந்துள்ளது என்றும் சரியான காரணங்களுக்காக பள்ளிகள் மூடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

“தேசிய அளவில் கிருமித்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதில் பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவதை ஊக்குவித்து, சமூக அளவிலான கலந்துறவாடல்களைக் குறைத்து, கிருமிப் பரவலைத் தடுக்க இது உதவும்,” என்றார் திரு ஓங்.

“கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். எளிதான அங்கமான பாடத்திட்டத்தை முடிப்பது மட்டும் கல்வியாகாது. அது ஒரு சமுதாயச் செயல்முறை, சமுதாயப் பயணம்,” என்றார் திரு ஓங்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘வைரஸ்’ குறித்து தம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரும்படி பெற்றோர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பிள்ளைகள் பலதரப்பட்ட அம்சங்கள் குறித்து விரிவாக வாசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!