ஜூன் 2 முதல் வழிபாட்டுத் தலங்களில் தனிப்பட்ட வழிபாடுகளுக்கு அனுமதி

வரும் ஜூன் 2ஆம் தேதியிலிருந்து வழிபாட்டுத் தலங்களில் தனிப்பட்ட வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த தலா ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே தனிப்பட்ட வழிபாடுகளில் பங்கேற்க முடியும். அப்போதும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.

இந்த வரம்புகள், வீட்டுக்கு வெளியே மற்றவர்களுடன் நேரடித் தொடர்பைக் குறைப்பதற்காக விதிக்கப்படுகிறது என்று கலாசார, சமூக, இளையர் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக நடப்பில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதல் கட்டத் தளர்வில் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் அனுமதிக்கப்படுவதாக அது கூறியது.

‘வழிபாட்டில் தனியொருவராக பங்கேற்கலாம் அல்லது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகபட்சமாக ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ளலாம். இதே போன்று ஐந்து குடும்பங்கள் தனித்தனியாக தனிப்பட்ட வழிபாடுகளில் பங்கேற்க முடியும். ஆனால் ஒரு குடும்பத்திற்கும் மற்ற குடும்பத்திற்கும் நேரடித் தொடர்பு இருக்கக் கூடாது,” என்று அமைச்சு விளக்கியது.

வழிபாட்டுத் தலங்களில் எல்லா சமயங்களிலும் வழிபாட்டில் பங்கேற்கும் நபர்களுக்கும் சமயச் சடங்குகளை நடத்தும் ஊழியர்களுக்கும் இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பது அவசியம் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

வழிபாட்டாளர்கள் வழிபாட்டுத் தலங்களில் தங்களுடைய நேரத்தைக் குறைத்துக் கொள்வதோடு மற்ற சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டுத் தலங்களில் சமய ஊழியர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

முதல் கட்டத் தளர்வில் நேரடியாக நடத்தப்படும் சமய வகுப்புகள், கூட்டு வழிபாடு போன்றவற்றுக்கு அனுமதியில்லை.

இத்தகைய சமய நடவடிக்கைகளில் பல குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பதால் கிருமித்தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.

திருமணப் பதிவு நிகழ்ச்சிகளில் திருமணத்தை நடத்தி வைப்பவரைத் தவிர அதிகபட்சமாக பத்து பேர் பங்கேற்கலாம் என்று அமைச்சு கூறியது.

இவர்களில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இரு சாட்சியாளர்களைத் தவிர மற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரின் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம்.

அதே சமயத்தில் மெய்நிகர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருமணம் செய்துகொள்ளவும் தம்பதியர்கள் ஊக்கவிக்கப் படுகின்றனர்.

இதனால் அன்புக்குரியவர்களை நோய் கிருமித் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று அமைச்சு கூறியது.

திருமணப் பதிவு, இறுதிச் சடங்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டும் சமய ஊழியர்கள் சமய சடங்குகளை செய்யலாம்.

திருமணப் பதிவு அல்லது இறுதிச் சடங்கு தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள் மற்றவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதை குறைத்துக் கொண்டு உடனடியாக வழிபாட்டுத் தலங்களை விட்டு வெளியேற வேண்டும். சிற்றுண்டி, குளிர்பான, தேநீர் விருந்துகளுக்கு அனுமதி கிடையாது.

சமூகத்திற்குத் தேவையான சமயச் சேவைகள், பிரார்த்தனைகள் போன்றவற்றைப் பதிவு செய்து ஒளிபரப்பி சமூகத்தின் சமயத் தேவைகளை சமய அமைப்புகள் பூர்த்தி செய்யலாம் என்று அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!