சிங்கப்பூர்-புருணை: வலுவான இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பு

சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான வலு­வான இரு­த­ரப்பு தற்­காப்பு ஒத்­து­ழைப்­புக்­குத் தங்­கள் கடப்­பாட்டை நேற்று மறு­வு­று­திப்­ப­டுத்­திக்­கொண்­டன.

சிங்­கப்­பூர்-புருணை தற்­காப்பு கொள்கை கலந்­து­ரை­யா­டல் நேற்று மெய்­நி­கர் வழி நடை­பெற்­றது. அதற்கு சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் திரு சான் ஹெங் கீயும் புருணை தற்­காப்பு அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் ஓய்­வு­பெற்ற பிரி­கே­டி­யர் ஜென­ரல் ஷாரில் அன்­வா­ரும் இணைத் தலை­வர்­க­ளா­கச் செயல்­பட்­ட­னர்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பரஸ்­பர ஆர்­வத்­துக்­குள்­ளான அனைத்­து­லக மற்­றும் வட்­டார தற்­காப்பு விவ­கா­ரங்­கள் குறித்து கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொண்ட இரு நாடு­களும் ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டம் போன்ற தற்­காப்பு ஒத்­து­ழைப்பு விவா­திப்­புத் தளங்­களை வர­வேற்­றன.

அடுத்த ஆண்டு ஆசி­யான் தலை­மைத்­து­வத்தை புருணை ஏற்­றுக்­கொள்­ளும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இரு­த­ரப்பு தற்­காப்­புக் கல்­வி­மான்­கள் வளர்ச்­சித் திட்­டத்­தின் அடுத்த கட்ட மேம்­பாட்­டுக்கு திரு சானும் ஜென­ரல் ஷாரி­லும் தங்­கள் ஒப்­பு­தலை அளித்­த­னர்.

சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான தற்­காப்பு உற­வின் 45ஆம் ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு கொண்டாடுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon