சுடச் சுடச் செய்திகள்

‘தொழில்நுட்பத்தை உருவாக்கும் நாடாக சிங்கப்பூர்’

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ரைக் கொண்­டுள்ள நாடு என்ற நிலை­யில் இருந்து தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கு­வோர் உள்ள நாடு என்ற நிலையை சிங்­கப்­பூர் எட்ட வேண்­டும் என்று அறி­வார்ந்த தேச திட்­டத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் வேகத்தை முடுக்­கி­விட்­டுள்­ளது என்று டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

அறி­வார்ந்த தேச தூதர்­கள் நூறு பேரி­டம் நேற்று மெய்­நி­கர் முறை­யில் கலந்­து­ரை­யா­டிய டாக்­டர் விவி­யன், காணொளி விளை­யாட்­டி­லேயே மோச­மாக இருந்த தாம் கணினி நிர­லி­டு­த­லைக் கற்­றுக்­கொள்ள உந்­தித் தள்­ளப்­பட்­டதை நினை­வு­கூர்ந்­தார்.

“நாம் அனை­வ­ரும் கணினி விளை­யாட்­டு­களை விளை­யாட மட்­டும் தெரிந்­த­வர்­க­ளாக இருந்து, அத்­த­கைய விளை­யாட்­டு­களை உரு­வாக்­கும் திற­னைக் கொண்­ட­வர்­க­ளாக இல்­லா­மல் போய்­வி­டு­வோமோ என்று சில வேளை­களில் நான் கவ­லைப்­பட்­ட­துண்டு. அத­னால்­தான், தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கு­ப­வர்­க­ளைக் கொண்ட நாடாக நாம் உரு­வெ­டுக்க வேண்­டும் என நான் விரும்­பு­கி­றேன்,” என்று வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான டாக்­டர் விவி­யன் சொன்­னார்.

சிங்­கப்­பூ­ரின் தொழில்­நுட்ப உந்­து­தல் தொடர்­பில் அறி­வார்ந்த தேச தூதர்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­டறி­யும் வகை­யில் மூன்று கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தத் திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது. அதன் முத­லா­வது அமர்வு நேற்று இடம்­பெற்­றது.

நாளை மறு­நாள் திங்­கட்­கி­ழ­மை­யும் வியா­ழக்­கி­ழ­மை­யும் அடுத்த இரு அமர்­வு­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. சுகா­தா­ரம், தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி, நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் (அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்­கம்) இங் சீ கென் ஆகி­யோர் முறையே அந்த அமர்­வு­களில் பங்­கேற்­பர்.

இப்­போது 1,600க்கு மேற்­பட்ட அறி­வார்ந்த தேச தூதர்­கள் உள்­ள­னர். அன்­றாட வாழ்­வில் தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்­து­வது பற்றி அவர்­கள் மற்­ற­வர்­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளித்து வழி­காட்­டு­வர்.

அவர்­க­ளின் முயற்­சி­க­ளுக்கு நன்றி கூறிக்­கொண்ட டாக்­டர் விவி­யன், அதே வேளை­யில் ‘வெளிப்­ப­டை­யான, பொருத்­த­மான, செயல்­ப­டுத்­த­வல்ல’ கருத்­து­களை அவர்­கள் தெரி­விக்­கும்­ப­டி­யும் கேட்­டுக்­கொண்­டார்.

எல்லா நேரங்­க­ளி­லும் அர­சாங்­கமும் சமூ­க­மும் இணைந்து புதிய சேவை­களை உரு­வாக்­க­வல்ல, மறு கற்­பனை செய்­ய­வல்ல எதிர்­கா­லத்­தைத் தாம் எதிர்­நோக்கி இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon