அன்னாசிப் பழப் பெட்டிகளுக்குள் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பிடிபட்டன

அன்னாசிப் பழப் பெட்டிகளுக்குள் மறைத்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பிடிபட்டன

1 mins read
46dd00b2-5aba-400a-9c2c-663923f1e230
படங்கள்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் -
multi-img1 of 3

பொருள் சேவை வரி செலுத்தப்படாத 7,559 கார்ட்டன் சிகரெட்டுகள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் வந்த இரண்டு வாகனங்களில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டபோது குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் கைப்பற்றினர்.

விசாரணைக்காக 22, 25, 41 வயதுகளில் இருக்கும் மூன்று மலேசியர்கள் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடத்தல்காரர்களால் $656,299 மற்றும் $52,981 அளவிலான பொருள் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

குறிப்புச் சொற்கள்