சாங்கி ஜுராசிக் மைல்லில் முறையற்ற நடத்தை; சிங்கப்பூரர்கள் கண்டனம்

புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள சாங்கி ஜுரா­சிக் மைல்­லில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்ள பொருட்­கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். விமான நிலை­யத்­தை­யும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வை­யும் இணைக்­கும் அந்த 3.5 கிலோ­மிட்­டர் நீள­முள்ள சாங்கி ஜுரா­சிக் மைல் திறக்­கப்­பட்ட ஒரு வாரம்­கூட ஆகாத நிலை­யில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த குட்டி டைன­சோர் சிற்­பம் மீது பெண் ஒரு­வர் உட்­கார்ந்து முன்­னுக்­கும் பின்­னுக்­கும் சாய்­வ­தைக் காட்­டும் காணொளி, சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வந்­தது. குட்டி டைன­சோர் சிற்­பத்­தின் ஐந்து பற்­க­ளைக் காண­வில்லை. குட்டி டைன­சோர் சிற்­பம் சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் பழு­து­பார்ப்­புப் பணி­க­ளுக்­காக அது தற்­கா­லி­க­மாக அங்­கி­ருந்து அப்

புறப்­ப­டுத்­தப்­படும் என்­றும் சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

பொது­மக்­கள் பார்த்து ரசிக்க டைன­டோர் சிற்­பங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பேச்­சா­ளர் கூறி­னார். அவை சேத­ம­டை­யா­மல் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பு அனை­வ­ருக்­கும் உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்,

“சிற்­பங்­கள் மீது ஏறி உட்­கா­ரக் கூடாது என சாங்கி ஜுரா­சிக் மைல் எங்­கும் எச்­ச­ரிக்கை பல­கை­கள் வைக்­கப்­படும். மக்­கள் நட­மாட்­டத்­தைக் கண்­கா­ணிக்க பாதை நெடு­கி­லும் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன,” என்று குழு­மத்­தின் பேச்­சா­ளர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

குட்டி டைன­சோர் சிற்­பம் சேதம் அடைந்­தி­ருப்­ப­தைப் பார்த்து அங்கு வந்­தி­ருந்­த­வர்­கள் கவலை தெரி­வித்­த­னர். இத்­த­கைய சம்­ப­வங்­கள் நிகழ்­வ­தைத் தடுக்க தவறு செய்­வோ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர். கொரோனா கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யின்­போது சாங்கி ஜுரா­சிக் மைல்­லில் மக்­கள் பலர் மிகுந்த ஆர்­வத்­து­டன் அங்கு திரள்­வ­தால் பாது­காப்­பான தூர இடை­வெளி கடைப்­பி­டிக்­கப்­படு

கிறதா என்­பது குறித்து கவலை எழுந்­துள்­ளது. எனவே, நேற்றி லிருந்து அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 3ஆம் தேதி வரை வெள்­ளிக்­கி­ழமை, சனிக்­கி­ழமை, ஞாயிற்­றுக்­கி­ழமை ஆகிய நாட்­களில் சாங்கி ஜுரா­சிக் மைல்­லுக்­குச் செல்ல விரும்­பு­வோர் சாங்கி பிளே­பா­சில் முன்­ப­திவு செய்ய வேண்­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon