பணிப்பெண் வழக்கில் பொய் சாட்சியம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

நீதி­மன்­றத்­தில் பொய்ச் சாட்சி சொன்­ன­தா­கக் கூறப்­பட்­டதை அடுத்து சாங்கி விமான நிலை­யக் குழு­ம முன்­னாள் தலை­வர் லியூ மன் லியோங்­கின் மகன் கார்ல் லியூ­வி­டம் போலிஸ் விசா­ரணை நடத்­தி­யது.

அவ்விசாரணை முடிவுற்ற நிலையில் கார்ல் லியூ மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டவிருப்பதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

அர­சாங்க அதி­கா­ரி­யி­டம் பொய்­யான தக­வ­லைத் தெரி­வித்­தது, பொய்ச் சாட்சி கூறி­யது ஆகிய இரு குற்­றச்­சாட்டு­கள் லியூ மீது சுமத்­தப்­ப­ட­வுள்ளன.

பொய்ச் சாட்­சி­யம் அளித்­தது தொடர்­பில் லியூ­வி­டம் போலிஸ் விசா­ரணை நடத்­தி­ய­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் சண்­மு­கம் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

குமாரி பார்தி லியானி மீதான திருட்­டுக் குற்­றச்­சாட்டு தொடர்­பான விசா­ர­ணை­யின்­போது லியூ பல குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தார். ஆனால், அவற்­றின் உண்­மைத்­தன்மை குறித்து உயர் நீதி­மன்ற நீதி­பதி ஐயம் கொண்­டார். தாம் பெண்­களின் டி-சட்­டை­களை அணிந்­திருந்­த­தாக லியூ கூறி­ய­தும் அவற்­றில் ஒன்று.

விசா­ர­ணை­யின்­போது லியூ­வின் நடத்­தை­யி­லும் அவ­ரின் சாட்­சி­யங்­க­ளி­லும் பல அம்­சங்­கள் மிகுந்த அதி­ருப்­தியை அளிப்­ப­தா­க­வும் சந்­தே­கத்தை எழுப்­பு­வதா­க­வும் இருந்­தன என்று திரு சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.

எடுத்­துக்­காட்­டாக, குமாரி லியா­னி­யின் வச­ம் இருந்த இரு பணப்­பை­களும் ஒரு கைக்­க­டி­கா­ர­மும் தம்­மு­டைய குடும்ப உறுப்­பி­னர்­கள் தனக்கு அளித்­தவை என்று லியூ சாட்­சி­யம் அளித்­து இ­ருந்­தார்.

ஆயி­னும், திரு லியூ மன் லியோங் உட்­பட அக்­கு­டும்ப உறுப்­பி­னர்­கள் எவ­ரும் அந்­தக் குறிப்­பிட்ட பொருள்­களைத் தாங்­கள் கொடுத்­த­தாக நினை­வு­கூர இய­ல­வில்லை.

பிரிட்­ட­னில் இருந்து தாம் வாங்கி வந்த படுக்கை விரிப்­பும் குமாரி லியா­னி­யி­டம் இருந்­த­தாக லியூ நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­து இ­ருந்­தார். ஆனால், இக்­கியா முத்­தி­ரை கொண்ட ஒரு மெத்தை உறை­யின் சாயலை அது ஒத்­து இ­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அத்­து­டன், அந்­தப் படுக்கை விரிப்­பைத் தனது அறை­யிலோ, படுக்­கை­யின்­மீதோ கண்­டதே இல்லை என்று கார்ல் லியூ­வின் மனைவி தெரி­வித்து இருந்தார்.

மேலும், பெண்­கள் அணி­யக்­கூ­டிய பல ஆடை­க­ளை­யும் தன்­னு­டை­யது என்று லியூ குறிப்­பிட்டு இருந்­தார்.

இத்­த­கைய முரண்­பட்ட கூற்­று­கள் குறித்து அவ­ரி­டம் விசா­ரிக்­கப்­பட்­ட­தாக அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

போலி­சி­டம் புகார் அளிப்பவர், சந்­தே­கத்­திற்­கு­ரிய பொருள்­கள் மீது உரிமை கோரும்போது தீவி­ரத்­தன்­மை­யு­டன் அதைச் செய்ய வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

“அது விரி­வாக இருக்க வேண்­டும் என்­ப­தில்லை. ஆனால், கவ­ன­மா­கப் பரி­சீ­லித்து அதைச் செய்ய வேண்­டி­யது அவ­சி­யம்,” என்­றார் அமைச்­சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!