100 புதிய பட்டதாரிகளுக்குப் பயிற்சி, 180 பேருக்கு வேலைவாய்ப்பு

எதிர்­வ­ரும் 2024ஆம் ஆண்­டிற்­குள் 180 புதிய வேலை­களை உரு­வாக்­க­ இ­ருக்­கிறது டாடா கன்­சல்­டன்சி சர்­வீ­சஸ் (டிசி­எஸ்) நிறு­வ­னத்­தின் புதிய மின்­னி­லக்க முடுக்க மையம்.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் ஆத­ர­வு­டன் தொடங்­கப்­படும் இம்மையத்தில் 100 புதிய பட்­ட­தாரி­க­ளுக்­குப் பயிற்சி வாய்ப்­பு­கள் வழங்­கப்­படும்.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் மீண்­டு­வ­ர­வும் எதிர்­கா­லத்­திற்கு ஆயத்­த­மா­க­வும் இம்மையம் ஆத­ரவு அ­ளிக்­கும்.

மின்­னி­லக்க முடுக்க மையத்தை அதி­கா­ர­பூர்­வ­மா­க நேற்று தொடங்கி­ வைத்துப் பேசிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன், “உள்­ளூர் தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் திறன் மேம்­பாட்­டிற்­கும் வேலை வாய்ப்பு உரு­வாக்­கத்­திற்­கும் இம்­மை­யம் மேலும் பங்­க­ளிக்­கும்,” என்­றார்.

இணை­யப் பாது­காப்பு, செயற்கை நுண்­ண­றிவு போன்ற அம்­சங்­களைக் கொண்ட திட்­டங்­களில் ஆழ­மான கற்­றல் அனு­ப­வத்தை பயிற்­சி­யா­ளர்­கள் எதிர்­பார்க்­க­லாம் என்று அமைச்­சர் சொன்னார். அவர்கள் ‘எஸ்­ஜி­யு­னை­டெட்’ பயிற்­சித் திட்­டங்­க­ளின்­மூ­லம் ஒன்­பது மாதங்­க­ளுக்குப் பயிற்சி பெறு­வர்.

அவர்­களில் முழு நேர­மா­கப் பணி­யாற்ற விரும்­பு­வோ­ரை­யும் புதி­தாக சேர்க்­கப்­படும் ‘பிஎம்­இடி’ எனப்­படும் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­க­ளை­யும் சேர்த்து, புதிய மையம் 2024ஆம் ஆண்டிற்குள் 180 ஊழி­யர்­க­ளை வேலை­யில் அமர்த்த கடப்­பாடு கொண்­டுள்­ளது.

உள்­ளூர் மின்­னி­லக்­கத் திற­னா­ளர்­களை வளர்த்து, பேண டிசி­எஸ் கொண்­டுள்ள நீண்­ட­கால கடப்­பாடு மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தா­கக் குறிப்பிட்டார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன். இம்­மு­யற்­சி­யில் மேலும் பங்­கா­ளித்­து­வத்தை எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!