ஜூரோங் ஈஸ்ட்டில் புதிய தொழிற்பேட்டை உதயமாகும்

ஜூரோங் ஈஸ்ட்டில் புதிய தொழிற்பேட்டை உதயமாகும்

1 mins read
a04cc1af-6ca1-4d0c-afe2-e53fdf0067f2
படம்: சிஎம்ஜி -

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள 'பிக் பாக்ஸ்' என்ற முன்னாள் கடைத்தொகுதி கட்டடத்தை $118 மில்லியன் விலைக்கு 'பெரினியல் ரியல் எஸ்டேட் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனம் வாங்கி இருக்கிறது.

அதில் $70 மில்லியன் முதலீடு செய்து அந்த இடத்தில் ஒரு தொழிற்பேட்டையை ஏற்படுத்த இந்த நிறுவனம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தக் கடைத்தொகுதி கட்டடம் அமைந்துள்ள இடத்தை தொழிற்பேட்டை இடமாக மாற்றுவதற்குத் தேவையான அங்கீகாரத்தை ஜூரோங் நகராண்மைக் கழகத்திடம் இருந்து அந்த நிறுவனம் பெற்று இருக்கிறது.

பிக் பாக்ஸ் கடைத்தொகுதி கட்டடம் ஜூரோங் ஏரி வட்டாரத்தில் அமைந்து இருக்கிறது.

அந்த வட்டாரம் சிங்கப்பூரில் நகர்ப் பகுதிக்கு வெளியே அமையக்கூடிய ஆகப் பெரிய வர்த்தக வட்டார மையமாக மேம்பட இருக்கிறது.

பிக் பாக்ஸ் கட்டடத்தின் பெரும் பகுதி பண்டகசாலை மற்றும் பண்டகசாலை சில்லறை வர்த்தகத்துக்காக வடிவமைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்