‘கோமள விலாஸ்’ குணசேகரன் காலமானார்

பிர­பல கோமள விலாஸ் உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு ராஜு குண­சே­க­ரன் நேற்று பிற்­ப­கல் கால­மா­னார். அவ­ருக்கு வயது 68.

இன்று பிற்­ப­கல் அவ­ரது உடல் தக­னம் செய்­யப்­ப­டு­கிறது. அவ­ருக்கு ஒரு மக­னும் மூன்று மகள்­களும் உள்­ள­னர். அவ­ரது மனைவி கோமதி குண­சே­க­ரன் கடந்த ஆண்டு கால­மா­னார்.

கடந்த 1947ஆம் ஆண்டு நிறு­வப்­பட்ட கோமள விலாஸ் சைவ உண­வ­கத்தை நடத்­தி­வந்­த­வர் திரு குண­சே­க­ரன். அவ­ரது தந்தை திரு ஓஎம் ராஜு அந்த உண­வ­கத்தை நிறு­வி­னார்.

திரு குண­சே­க­ரன் சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்­கள் சங்­கத்­தின் தலை­வ­ராக 2000ஆம் ஆண்­டி­லி­ருந்து 2004ஆம் ஆண்­டு­வ­ரை செயல்­பட்­டார்.

“வெளிப்­ப­டை­யா­கப் பேசும் மனி­தர் அவர். அவ­ரது மறைவு சிங்­கப்­பூர் இந்­திய உண­வ­கங்­க­ளுக்­கும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் இந்­திய சமூ­கத்­துக்­கும் இழப்பு,” என்­றார் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கத்­தின் தலை­வர் திரு சி.சங்­க­ர­நா­தன், 48.

பல சமூக நிகழ்ச்­சி­க­ளுக்­குப் பொருள் ஆத­ரவு வழங்­கு­வ­தோடு நேர­டி­யாக கலந்­து­கொள்­வார் திரு குண­சே­க­ரன்.

“பழ­மையை மறக்­கா­மல் புது­மை­யை­யும் புகுத்தி வெற்­றி­க­ர­மா­கத் தொழில் நடத்­திய பெருமை திரு குண­சே­க­ர­னைச் சேரும்,” என்­றார் அவ­ரது நெருங்­கிய நண்­பர் என அடை­யா­ளப்­ப­டுத்­திக் கொண்ட ஜோதி ஸ்டோர் பு‌ஷ்­பக்­க­டை­யின் உரி­மை­யா­ளர் திரு ராஜ­கு­மார் சந்­திரா, 62.

சமூக நிகழ்ச்­சி­க­ளுக்கு வாரி வழங்­கிய வள்­ளல் என்­றும் அவரை வரு­ணித்த அவர், அவ­ரது மறைவு சிங்­கப்­பூர் இந்­திய சமூ­கத்­திற்­குப் பெரும் இழப்பு என்­றார்.

“எதை­யும் எளிதாக எடுத்­துக்­கொள்­ளும் ஜாலி­யான டைப்,” என்று திரு குண­சே­க­ர­னைப் பற்றி நினை­வு­கூர்ந்­தார் காயத்ரி உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு சண்­மு­கம் கணே­சன், 58.

“சிறு வயது முதல் கடின உழைப்­பால் உண­வ­கத்தை வளர்த்­ த­வர் அவர். 34 ஆண்­டு­க­ளாக அவரை அறி­வேன். இறு­திக் காலம் வரை­யில் தமது தொழி­லைப் பற்­றியே சிந்­தித்து வந்த அவர், பிள்­ளை­களை நல்ல முறை­யில் வளர்த்­துள்­ளார். அவர்­கள் இப்­போது சிறப்­பா­கக் கடையை நடத்தி வருகின்­ற­னர்,” என்­று கூறினார் திரு சண்­மு­கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!