டெங்கி காய்ச்சல் ஆபத்து இன்னமும் நீடிக்கிறது

சிங்­கப்­பூ­ரில் டெங்­கி காய்ச்­சல் ஆபத்து இன்­ன­மும் ஓய்ந்­த­பாடில்லை. அந்­தக் காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்து இருக்­கிறது என்­றா­லும் அந்த நோயை ஏற்­படுத்­தக்­கூ­டிய கொசுக்­கள் இன்­ன­மும் ஒடுங்­க­வில்லை என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் எச்சரித்து இருக்­கிறது.

இந்த மாதத்­தின் நடுப்­ப­கு­தி­யில் வாரம் ஒன்­றுக்கு 156 பேர் டெங்­கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்த எண்­ணிக்கை சென்ற மாத நடுப்­ப­கு­தி­யில் 236 பேராக இருந்­தது.

இருந்­தா­லும், டெங்­கி காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கொசுக்­களின் இனப்­பெ­ருக்­கம் சென்ற மாதம் 8 விழுக்­காடு அதி­க­ரித்து விட்­டது.

இது ஒரு­பு­றம் இருக்க, பொது­வாக இங்கு காணப்­ப­டாத டென் வி-3 மற்­றும் டென் வி-4 என்ற இரு வகை கொசுக்­க­ளின் இனப்­பெ­ருக்­க­மும் அதி­க­ரித்துள்ளது.

கொசுக்­கள் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் 50 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­ட­வர்களுக்கு இந்த வகை கொசுக்­களே கார­ண­மாக இருக்­கின்­றன.

டெங்­கி காய்ச்­சலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய நான்கு வகை கொசுக்­கள் இருக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்டு உள்­ளோர் ஒரு குறிப்­பிட்ட வகை கொசு­வுக்கு எதி­ரான தடுப்­பாற்­றலை மட்­டும் பெற்று இருக்­கி­றார்­கள்.

இதர மூன்று வகை கொசுக்­களை எதிர்க்­கக்­கூ­டிய தடுப்­பாற்றல் அவர்­க­ளி­டம் இருக்­காது என்­பதால் எஞ்­சிய மூன்று வகை கொசுக்­கள் மூலம் அவர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பு­கள் உண்டு.

சிங்­கப்­பூ­ரில் 2020க்கு முன்பு 30 ஆண்டு காலத்­தில் ஏற்­பட்ட எல்லா டெங்­கி காய்ச்­சல்­க­ளுக்­கும் டென் வி-1 கொசுவே கார­ணம். அல்­லது 2016க்கு பிறகு டென் வி-2 வகை கொசு­வால் மக்­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

சென்ற ஆண்­டில் டென் வி-3 வகை கொசு இனப்­பெ­ருக்­கம் அதி­க­ரித்­துவிட்டது.

இந்த வகை கொசுவே இங்கு அதிக மக்­கள் டெங்­கிக் காய்ச்­ச­லால் இப்ேபாது பாதிக்­கப்­ப­டு­வதற்கு கார­ண­மாக இருக்­கக்­கூடும்.

சென்ற ஆண்­டில் மொத்­தம் 35,515 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். குறைந்­த­பட்­சம் 29 பேர் மாண்டு இருக்­கி­றார்­கள்.

இதற்கு முன்­ன­தாக 2013ல் 22,170 பேர் டெங்­கி காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­ட­னர். 2005ல் 25 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இதற்­குப் பிறகு சென்ற ஆண்­டில்­தான் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் மரண எண்­ணிக்­கை­யும் கூடி­யது.

கொசு மூலம் பர­வும் டெங்­கி காய்ச்­ச­லுக்கு எதி­ராக மேலும் விழிப்­பு­நிலை தேவை என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் வலி­யு­றுத்­தி இருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon