செய்திக்கொத்து

காய்கறித் தோட்டப் பிரியர்களுக்கு 3,000 விதைப் பொட்டலங்கள்

சிங்கப்பூரர்களிடையே காய்கறித் தோட்டக்கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய பூங்காக் கழகம் ஏறத்தாழ 3,000 விதைப் பொட்டலங்களை விநியோகிக்கும். தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட விரும்புவோர் தங்களுக்கு விருப்பமான விதைகளைக் கேட்டு இப்போது பதிந்துகொள்ளலாம். அவர்கள் 6471-5601 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஹோர்ட்பார்க் என்ற பூங்காவில் நேற்று சமூக காய்கறித் தோட்டப் போட்டி நடந்தது. அதில் தேசிய வளர்ச்சி, நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா விதைகள் விநியோகம் பற்றி அறிவித்தார்.

அத்தகைய விதைகளைப் பெற்று, அவற்றை வெற்றி கரமான முறையில் பயிராக்கும் தோட்டக் கலைஞர்கள் வரும் அக்டோபரில் நடக்கும் அடுத்த போட்டியில் தங்கள் விளைச்சல்களுடன் கலந்துகொள்ளலாம்.

கிளமெண்டியில் சோதனை: போலிஸ் விளக்கம்

கிளமெண்டி அவென்யூ 4ல் உள்ள புளோக் 309ல் மார்ச் 17ஆம் தேதி அதிகாரிகள் நடத்திய சோதனையில் போதைப்பொருள், துப்பாக்கிகள் ஆகியவற்றுக்குத் தொடர்பில்லை என்றும் யாரும் கீழே குதிக்கவில்லை என்றும் போலிஸ் விளக்கம் அளித்துள்ளது.

அந்தச் சோதனை தொடர்பில் பல்வேறு பொய்ச் செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. குறுஞ்செய்தி செயலிகளிலும் அவை இடம்பெற்றுள்ளன.

இது பற்றி தாங்கள் புலன்விசாரணை நடத்தி வருவதாகவும் போலிஸ் தனது அறிக்கையில் நேற்று தெரிவித்தது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஒருவர் மட்டும் கைதானார் என்றும் அவர் போதைப் பொருள் கடத்தியவர் அல்லர் என்றும் அறிக்கை கூறியது.

'ரமலான் மாதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்'

ரமலான் நோன்பு மாதத்தில் தடுப்பூசியும் மூக்கு திரவ பரிசோதனையும் அனுமதிக்கத்தக்கவையே என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்து உள்ளது. முஸ்லிம்கள் சிலர், ரமலான் மாதத்தில் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்ற சந்தேகம் காரணமாக அதை ஒத்தி வைக்க விரும்புகிறார்கள் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமயத் தலைவரான முஃப்தி நசிருதீன் முகம்மது நசிர் கூறினார்.

"தடுப்பூசி ஒருவரின் நோன்பை முறித்துவிடாது. மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள ஆலோசனை களின்படி முன்னெச்சரிக்கைகளுடன் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்பதே முக்கியமானது," என்று அவர் தெரிவித்தார். ரமலான் நோன்பு மாதம் ஏப்ரல் 13 முதல் மே 12 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

முஸ்லிம்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தகுதி உள்ள தங்கள் குடும்பத்தாரையும் நண்பர்களையும் ஊசி போட்டுக்கொள்ளும்படி ஊக்குவித்து வருகிறார்கள் என்றும் இதற்குத் தான் நன்றி கூறுவதாகவும் முஃப்தி கூறினார். கிருமித்தொற்று தொடர்பான வழிகாட்டி நியதிகளும் சமயம் தொடர்பான கேள்விகளுக்கு விடை களும் உள்ள கையேடு ஒன்றை முயிஸ் அலுவலகம் நேற்று வெளியிட்டது.

இதனிடையே, சிங்கப்பூர் பள்ளிவாசல்களில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் ரமலான் மாத சிறப்புத் தொழுகைகள் (தராவீஹ் மற்றும் கியாமுல் லைல்) இடம்பெறும் என்று முஃப்தி அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!