உருமாறிய கொரோனா கிருமியை கண்டறியும் புதிய விரைவுப் பரிசோதனை முறை

உரு­மா­றிய கொரோனா கிரு­மி­யைக் கண்­ட­றி­யும் புதிய கொவிட்-19 விரை­வுப் பரி­சோ­தனை முறை சிங்­கப்­பூ­ரில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அரை மணி நேரத்­திற்­குள் பரி­சோ­தனை முடி­வு­களை வழங்­கும் இது, நோயா­ளி­க­ளின் பரி­சோ­தனை மாதிரி மீது நேர­டி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­லாம்.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் பயன்­படுத்­தப்­பட்டு வரும் 'ராப்­பிட் ஆன்­டி­ஜன்' (ஏஆர்டி) பரி­சோ­தனை முறை­யை­விட இது ஏறக்­கு­றைய 10 மடங்கு துல்­லி­ய­மாக இருக்­கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

'வேன்­கார்ட்' என்று அழைக்­கப்­படும் இந்­தப் பரி­சோ­தனை முறையை நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தை (என்டியு) சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் தயா­ரித்­து உள்­ள­னர்.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் பயன்­படுத்­தப்­படும் 'ஏஆர்டி' பரி­சோ­தனை முறை, கொரோனா கிரு­மி­யின் மேற்­ப­ரப்­பில் உள்ள 'ஆன்­டி­ஜன்' எனப்­படும் ஒரு­வகை புர­தத்­தைக் கண்­ட­றி­கிறது. இந்­தப் புர­தத்­தில் மாற்­றம் எது­வும் ஏற்­பட்­டால் 'ஏஆர்டி' பரி­சோ­தனை முடி­வு­கள் துல்­லி­ய­மான முடி­வு­க­ளைத் தரா­மல் போக­லாம்.

'ஏஆர்டி' பரி­சோ­தனை முறை நோய் எதிர்ப்­பொ­ரு­ளைச் சார்ந்­து இ­ருக்­கிறது. நோய் எதிர்ப்­பொருளை மறு­வ­டி­வ­மைக்க நேரம் எடுக்­கும் என்­ப­தால் இந்­தப் பரி­சோ­த­னையை மறு­வ­டி­வ­மைக்கவும் காலம் எடுக்­கும்.

இந்­தப் பரி­சோ­தனை முறைக்­கான ஆய்வை வழி­ந­டத்­திய இணைப் பேரா­சி­ரி­யர் டான் மெங் ஹாவ், சந்­தை­யில் விற்­ப­னைக்கு வரும்­போது வழக்­க­மான 'ஏஆர்டி' பரி­சோ­த­னை­யை­விட 'வேன்­கார்ட்' பரி­சோ­த­னைக்­கான செலவு குறை­வாக இருக்­கக்­கூ­டும் என்று சொன்­னார்.

உல­க­ள­வில் உரு­மா­றிய கொரோனா கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்டு உள்­ளது. பிரிட்­ட­னின் 'பி117', பிரே­சி­லின் 'பி1', தென்­ ஆப்­பி­ரிக்­கா­வின் 'பி1351' வகை கிருமி உள்­ளிட்­டவை அதில் அடங்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!