சமூகத்தில் 27 பேர் உட்பட புதிதாக 41 பேருக்கு கொவிட்-19 தொற்று

சமூக அள­வில் 27 பேர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 41 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. சமூ­கத்­தில் கிருமி தொற்­றி­ய­வர்­களில் ஆறு பேர், முன்­ன­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில்­லாத நிலை­யில் உள்­ள­னர்.

எஞ்­சிய 21 பேரும் முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­களில் 15 பேர் ஏற்­கெ­னவே தனிமை உத்­த­ர­வில் உள்­ள­னர். இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த 14 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அவர்­களில் 10 பேர் நாடு திரும்­பிய சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­களில் புதி­தாக எவ­ருக்­கும் தொற்று பதி­வா­க­வில்லை. சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 61,730ஐ எட்­டி­யுள்­ளது.

நேற்று முன்­தி­னம் 38 கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. நால்­வர் வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­கள் என்­றும் சமூ­கத்­தில் உள்­ள­வர் 34 பேர் என்­றும் கூறப்­பட்­டது. இவ்­வாண்­டில் பதி­வான இரண்­டா­வது ஆக அதி­க சமூ­கத்­தொற்று எண்­ணிக்கை இது.

'வெஸ்ட்­கேட்' பேரங்­கா­டி­யில் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர் பணி­யில் இருந்த ஒரு­வ­ர், சாங்கி சிறைச்­சாலை கைதி­கள் மூவர், பள்ளி மாண­வர்­கள் ஐவர் ஆகி­யோ­ரும் புதன்­கி­ழமை பதி­வான சம்­ப­வங்­களில் அடங்­கு­வர்.

ஐந்து புதிய கிரு­மிக் குழு­மங்­களைச் சுகா­தார அமைச்சு அடை­யா­ளம் கண்­டுள்­ள நிலையில் சிங்­கப்­பூ­ரில் 24 கிரு­மித்தொற்றுக் குழு­மங்­கள் உரு­வா­கி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!