மூச்சுக்காற்று பரிசோதனை முறை துவாசில் விரைவில் கொவிட்-19 பரிசோதனையை வேகமாக, துல்லியமாக நடத்த புதிய ஏற்பாடு

ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று இருக்­கி­றதா என்­பதை ஒரே நிமிடத்­தில் துல்­லி­ய­மா­கக் கண்­டு­பி­டித்து­வி­டக்கூடிய மூச்­சுக்­காற்று பரி­சோதனை முறை சிங்­கப்­பூ­ரில் சோதித்­துப் பார்க்­கப்­படும்.

துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் அடுத்த சில நாட்­களில் அந்த முறை­யைத் தொடங்கத் திட்­ட­மி­டப்­பட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த 'பிரித்­தோ­னிக்ஸ்' என்ற நிறு­வ­னம் உரு­வாக்கி இருக்­கும் 'பிரி­ஃபென்ஸ் கோ கொவிட்-19 மூச்­சுக்­காற்­று சோதனைக் கருவி' (BreFence Go Covid-19 Breath Test System) என்ற அந்­தக் கரு­விக்கு சிங்­கப்­பூர் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தற்­கா­லிக அங்­கீ­கா­ரம் வழங்கி இருக்­கிறது.

இந்­தப் பல்­க­லைக்­க­ழ­க­மும் பிரித்­தோ­னிக்ஸ் நிறு­வ­ன­மும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

இந்த மூச்­சுக்­காற்று பரி­சோ­தனை முறை மூலம் வேக­மாக, செம்­மை­யாக கொவிட்-19 கிருமி இருக்­கி­றதா என்­பதை தெரிந்­து­கொள்­ள­லாம். இந்­தச் சோத­னையை நடத்த பயிற்சி பெற்­ற­வர்­களே போதும். மருத்­துவப் பயிற்சி பெற்ற ஊழி­யர்­கள் தேவை­யில்லை.

துவாஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் புதிய கரு­வியைச் சோதித்­துப் பார்ப்­ப­தன் தொடர்­பில் சுகா­தார அமைச்­சு­டன் சேர்ந்து பிரித்தோ னிக்ஸ் இப்­போது செயல்­பட்டு வரு­கிறது. அந்­தச் சோத­னைச்­சா­வடி வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வரு­ப­வர்­களுக்குச் சுவா­சக்­காற்று பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

இப்­போ­தைய கொவிட்-19 கட்­டாய ஏஆர்டி சோத­னை­யு­டன் சுவா­சக்­காற்­றுச் சோத­னை­யும் நடத்­தப்­படும். ஏர்­ஆர்டி சோதனை மூலம் அதே இடத்­தில் 30 நிமி­டங்­களில் முடிவை தெரிந்­து­கொள்­ள­லாம்.

கொவிட்-19 தொற்று இருக்­கிறதா என்­ப­தைக் கண்­ட­றிய நம்­ப­க­மான சோதனை என்று கரு­தப்­படும் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு அதிக கால நேரம் ஆகும்.

யாருக்­கா­வது மூச்­சுக்­காற்­றுச் சோதனை மூலம் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தால் அதை உறு­திப்­ப­டுத்த அவர் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

இத­னி­டையே, புதிய மூச்­சுக்­காற்­றுக் கருவி பற்றி விளக்­கிய பிரித்­தோ­னிக்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி டாக்­டர் ஜியா ஸுமான், இதைப் பயன்­ப­டுத்­து­வோரிடையே கிருமி தொற்ற வாய்ப்பு இல்லை என்று கூறி­னார். கார­ணம் ஒரு­வர் வெளியே விடும் காற்று இந்­தச் சாத­னத்­துக்கு உள்ளே போக முடி­யா­மல் தடுக்­கப்­பட்­டு­வி­டும் என்­றார் அவர்.

இந்­தப் புதிய கருவி 2020 ஜூன் முதல் 2021 ஏப்­ரல் வரை மூன்று இடங்­களில் மருந்­தகப் பரி­சோ­தனை­ க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

பிரித்­தோ­னிக்ஸ் நிறு­வ­னத்தை பேரா­சி­ரி­யர் டி வெங்கி வெங்­க­டே­ச­னு­டன் சேர்ந்து இந்­தப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் மூன்று பட்­ட­தா­ரி­கள் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இதற்கு இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­ட­தா­ரி­கள் ஆய்­வுப் புத்­தாக்­கச் செயல்­திட்­டம் ஆத­ரவு அளிக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!