கடைத்தொகுதிகள், பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதிகளில் விரைவுப் பரிசோதனை அறிமுகமாகும்

கொவிட்-19 கொள்­ளை­நோய் வேக­மா­கப் பர­வி­வ­ரு­வ­தைத் தடுக்க தங்­கு­வி­டு­தி­கள், கடைத்­தொ­கு­தி­கள் போன்­றவற்­றில் அது குறித்த பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட உள்ளதாகக் கூறப்­பட்­டது.

இதன் தொடர்­பில், நிகழ்ச்­சி­கள் நடை­பெ­று­வ­தற்கு முன் பயன்­படுத்­தப்­படும், ஏண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­யின் முறை­யின்­கீழ் 30 நிமி­டங்­களில் ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருக்­கி­றதா என்­பதைக் கண்­ட­றி­யும் வழி உள்­ளது.

இது தற்­பொ­ழுது ஊழி­யர் தங்கு­வி­டு­தி­கள், கட்­டு­மா­னத் தளங்­கள், விமான நிலை­யங்­கள், கப்­பல் பட்­ட­றை­கள் போன்­ற­வற்­றில் பயன்­ப­டுத்­தப்­படுகிறது.

அத்­து­டன், 'பிசி­ஆர்' எனப்­படும் பல்­ப­டி­யத் தொடர்­வினை பரி­சோ­தனை முறை­யி­லும் இங்­குள்ள ஊழி­யர்­கள் பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

ஏண்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை முறையை இங்­குள்ள தன்­னாட்சி பல்­க­லைக்­க­ழக மாண­வர் தங்­கு­வி­டு­தி­களில் அறி­மு­கம் செய்­ய­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ள­ளது.

மேலும், கேப்­பிட்­டாலாண்ட் நிறு­வ­னத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சில கடைத்­தொ­கு­தி­களில் உள்ள குத்­த­கை­தா­ரர்­களும் அங்கு செல்­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் இந்­தப் பரி­சோ­தனை முறையை அறி­மு­கம் செய்ய உள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் விவ­ரித்­துள்­ளது.

இந்­தச் சோதனை முறை அடிக்கடி பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நடை­முறை சாத்­தி­ய­மான ஒன்று என்­ப­து­டன் நல்ல பயன்­த­ரக்­கூ­டிய ஒரு சோதனை முறை என்­றும் அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது.

"அனைத்து பணி­யி­டங்­க­ளி­லும் அனைத்து முத­லா­ளி­களும் தங்­கள் ஊழி­யர்­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கும் நோக்­கில் இது­போன்ற மாறு­பட்ட பரி­சோ­த­னை­களைக் கடைப்­பி­டிப்­பதை ஊக்­கு­விக்­கி­றோம்," என்­றும் அமைச்­சின் அறிக்கை விளக்­கி­யது.

ஏண்­டி­ஜன் ரேப்­பிட் பரி­சோ­த­னை­யில் கிரு­மித்­தொற்று ஒரு­வ­ருக்கு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டால், அவர் பின்­னர் 'பிசி­ஆர்' எனப்­படும் பல்­ப­டி­யத் தொடர்­வினை பரி­சோ­த­னை­யை­யும் மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்று அமைச்சு விளக்கியது.

பிசி­ஆர் புரி­சோ­த­னை­யில் அந்த நப­ருக்குத் தொற்று இல்லை என்று தெரி­யும்­வரை அவர் தன்­னைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!