உங்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்; விரைவில் வசதி

உங்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இருக்­கி­றதா என்­பதை நீங்­களே பரி­சோ­தித்­துப் பார்த்­துக்கொள்ள உத­வும் கருவி மருந்து கடைகளில் விற்­ப­னைக்கு வரு­கிறது.

கொவிட்-19 தொற்றை உடனுக்­கு­டன் கண்­டு­பி­டித்து தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டுகளை விரை­வாக செய்து கிருமிப் பர­வ­லைத் தடுக்க சிங்­கப்­பூர் முழு­மூச்­சாக பரி­சோ­தனை­களை முடுக்­கி­விட்டு வரு­கிறது.

இதில் மேலும் ஒரு வச­தி­யாக இந்த ஏற்­பாடு இடம்­பெ­றும் என்று பிர­த­மர் லி சியன் லூங் நேற்று தெரி­வித்­தார். அந்த சுய பரி­சோ­தனைக் கரு­வியைப் பயன்­ப­டுத்­து­வது எளிது. வச­தி­யானதாக­வும் அது இருக்­கிறது என்று திரு லீ தெரி­வித்­தார்.

கொரோனா தொற்­றைக் கண்டு­பி­டிக்க சிங்­கப்­பூ­ரில் பிசி­ஆர், ஏஆர்டி பரி­சோ­தனைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு மாற்­றாக இருக்­கும் இந்தச் சோத­ன­கள் தொற்று உள்­ள­வர்­களை விரை­வா­கக் கண்டுபிடித்து அவர்­க­ளைத் தனி­மைப்­படுத்த உத­வு­கின்­றன.

கொவிட்-19 தொற்­றைக் குறைப்­ப­தில் இது பெரும் உத­வி­யாக இருக்­கிறது என்று திரு லீ தெரி­வித்­தார். பிசி­ஆர் பரிசோ­தனை­தான் துல்­லி­ய­மா­னது, ஆனால் அதற்கு ஓரிரு நாட்­கள் பிடிக்­கும்.

ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் 30 நிமி­டங்­களில் முடி­வைத் தெரிந்து கொள்­ள­லாம். இருந்­தா­லும் இதை அந்த அள­வுக்கு நம்ப முடி­யாது.

சுய பரிசோ­த­னைக் கரு­வியை மக்­கள் வாங்­க­லாம். அதைக் கொண்டு தங்­க­ளுக்குத் தொற்று இல்லை என்­பதை அவர்­கள் உறு­திப்­ப­டுத்­திக் கொண்டு நிம்­ம­தி­யாக இருக்­க­லாம் என்றார் அவர்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் தாங்கள் விரும்பினால் அன்றாடம் தாங்களே தங்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!