சென்ற ஆண்டு 15,000 மோசடிப் புகார்கள்; $200 மில்லியன் இழப்பு

கடந்த ஆண்டு மோசடி தொடர்­பில் காவல்­து­றைக்கு 15,000க்கும் அதி­க­மான புகார்­கள் வந்­தன. இது, 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 65% அதி­கம்.

அந்த மோச­டி­கள் மூலம் கிட்­டத்­தட்ட $200 மில்­லி­யன் இழப்பு ஏற்­பட்­டது.

சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கம் நேற்று மெய்­நி­கர் முறை­யில் நடத்­திய நிதி­யி­யல் குற்­றம் குறித்த கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்­ட­போது உள்­துறை துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் இந்த விவரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

வங்­கி­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­கள் இத்­த­கைய மோச­டி­க­ளுக்கு இரை­யா­கா­மல் தடுக்க, அமைச்சு­கள்­நிலை மோச­டித் தடுப்­புக் குழு, சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கத்­து­டன் அணுக்­க­மாக இணைந்து பணி­புரிந்து வரு­வ­தாக திரு டான் குறிப்­பிட்­டார்.

அந்த அமைச்சு­கள்­நிலை மோசடித் தடுப்­புக் குழுவின் தலைவராக திரு டான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மோச­டி­க­ளைக் கண்­ட­றிந்து, அவற்றை முறி­ய­டிக்க வங்­கி­க­ளின் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்­சி­ வழங்குவது தொடர்­பில் வங்கி­கள் சங்­க­மும் அமைச்­சு­கள்­நிலை மோச­டித் தடுப்­புக் குழு­வும் வங்­கி­க­ளு­டன் அணுக்­க­மாக இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன.

கடந்த ஆண்­டில் வங்­கி­க­ளின் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் மொத்­தம் $3 மில்­லி­யன் தொடர்­பான 76 மோசடி முயற்­சி­களை இடை­மறித்­த­னர் என்று திரு டான் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, மோச­டி­கள் மற்­றும் மோச­டி­யான பரி­வர்த்­த­னை­களில் இருந்து வாடிக்­கை­யா­ளர்­களைப் பாது­காப்­பது தொடர்­பான நிதித்­து­றை­யின் நடை­மு­றை­களை மறு­ஆய்வு செய்­யும் பொருட்டு வங்­கி­கள், முக்­கிய கட்­ட­ணச் சேவை நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் அடங்­கிய பணிக்­கு­ழுவை ஆணை­யம் அமைத்­தி­ருப்­ப­தாக திரு டான் கூறி­னார்.

"மோச­டி­யான கட்­ட­ணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான பொறுப்­பைப் பங்­கி­டு­வ­தில் நியா­ய­மான, தெளி­வான, நிலை­யான அணு­கு­மு­றை­களை வழங்­கு­வதே இந்த மறு­ஆய்­வின் நோக்­கம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!