சகுந்தலாஸ் உணவகம் உட்பட எட்டு உணவு, பானக் கடைகளை பத்து நாட்களுக்கு மூட உத்தரவு

எட்டு உணவு, பானக் கடைகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக மேலும் 13 உணவு, பானக் கடைகளுக்கும் 56 தனிநபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஒரு வாரத்தில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின்போது அந்த உணவு, பானக் கடைகளின் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும் அது கூறியது.

நாளை மறுநாள் திங்கட்கிழமை கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படவிருப்பதால், வரும் வாரங்களில் தங்களின் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று சம்பந்தப்பட்ட அமைப்புகள் தெரிவித்தன.

அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதி செய்யத் தவறியது, மேசைகளில் அமர்ந்திருக்கும் குழுக்களுக்கிடையே கலந்துறவாடலை அனுமதித்தது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டுக்கு மேற்பட்டவர்களை பல்வேறு மேசைகளில் அமர அனுமதித்தது போன்ற பல விதிமீறல்கள் காரணமாக எட்டு உணவு, பானக் கடைகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது என்றும் அமைச்சு விளக்கியது.

பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியில் உள்ள 'நண்டோஸ்' உணவகம், ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள 'கார்ல்ஸ் ஜூனியர்' உணவகம், பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் உள்ள ஃபுட் ஜங்ஷன் உணவு நிலையம், ஓரியண்டல் பிளாசாவில் உள்ள 'கிளப் டைமண்ட்', லக்கி பிளாசா கடைத்தொகுதியில் உள்ள '3 கிங்ஸ் பப்', கிங்ஸ் செண்டரில் உள்ள 'கிராண்ட் ஷங்காய்', டன்லப் ஸ்திரீட்டில் உள்ள சகுந்தலாஸ் உணவகம், அமோய் ஸ்திரீட்டில் உள்ள 'தி பிரேவரி' உணவகம் ஆகியவையே அந்த எட்டு உணவு, பானக் கடைகள். சகுந்தலாஸ் உணவகம் இம்மாதம் 2ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அமர்ந்து உணவு உண்பதற்கு மூடப்பட்டி ருக்கும்.

அத்துடன், சையது ஆல்வி ரோட்டில் உள்ள ஷிவ் சாகர் சமய உணவகம் உட்பட 13 உணவு, பானக் கடைகள் அமர்ந்தும் உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதி செய்யத் தவறியது, வாடிக்கையாளர்களுக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசையை ஒலிக்கச் செய்தது ஆகியவற்றுக்காக தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, பல்வேறு உணவு, பானக் கடைகளில் இரண்டுக்கு மேற்பட்ட குழுக்களாக ஒன்று கூடியவர்களுக்குத் தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது. ஓர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் முகக்கவசம் அணியாததற்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜூலை 2 முதல் 4ஆம் தேதி வரை பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய 33 பேருக்கும் $300 அபராதம் விதிக்கப்பட்டது.

கடுமையில்லாத உடற்பயிற்சியில் ஈடுபடும்போது முகக்கவசம் அணியாமல் இருந்தது, அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி பெரிய குழுக்களாகக் கூடியது போன்றவை அந்த விதிமீறல்களில் சில.

உதாரணத்துக்கு, காலாங் ரிவர்சைட் பூங்காவில் 11 மற்றும் 13 பேர் அடங்கிய இரு குழுக்கள் கூடியதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

முகக்கவசம் அணியாமல் இருந்ததற்கும் அல்லது அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட பெரிய குழுக்களாகக் கூடியது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 900க்கு மேற்பட்டவர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டன.

"தேசிய பூங்காக் கழகம் நிர்வகிக்கும் பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் விளையாட்டுப் பகுதிகள், நீர் பொழுதுபோக்கு வசதிகள், ஓய்வெடுக்கும் கூடாரங்கள், உணவை வாட்டும் கூடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்," என்றும் அமைச்சு தெரிவித்தது.

பூங்காக்களில் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், உணவு உண்பவர்கள், தண்ணீர் அருந்துபவர்கள், தியானம் மேற்கொள்வோர் ஆகியோரைத் தவிர்த்து அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

"உணவு, பானக் கடைகளில் அமர்ந்து உணவுண்பது அதிக அபாயமுள்ள நடவடிக்கையாகும். இம்மாதம் 12ஆம் தேதி, ஐந்து பேர் வரை குழுக்களாக உணவு உண்ண அனுமதிக்கப்பட்டிருப்பதால், அனை வரும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்றும் அமைச்சு கேட்டுக் கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!