கேடிவி குழுமத் தொற்றைக் கட்டுப்படுத்த நான்கு பாதுகாப்பு வளைய அணுகுமுறை

கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் வேளை­யில், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த தமது அமைச்சு நான்கு பாது­காப்பு வளை­யங்­கள் கொண்ட அணு­கு­மு­றை­யைக் கையா­ளு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­தில் நேற்று மாலை நில­வ­ரப்­படி 120 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அதில் முத­லா­வ­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர் இம்­மா­தம் 11ஆம் தேதி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டார்.

பாது­காப்பு வளை­யம் 1: கேடிவி கூடங்களுக்குச் சென்று வந்­த­வர்­கள் டிரேஸ்­டு­கெ­தர் மற்­றும் சேஃப்என்ட்ரி தரவு மூலம் அடை­யா­ளம் காணப்­பட்­டார்­கள்.

அவ்வாறு கண்டறியப்பட்ட 2,480 பேரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டுவிட்­ட­ னர். அவர்­களில் சில­ருக்­குக் கிரு­மித்தொற்று இருப்­பது உறு­தி­யா­னது. தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட காலத்­தில் அவர்­கள் பல­முறை கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்­டும்.

பாது­காப்பு வளை­யம் 2: பாதிக்­கப்­பட்ட கேடிவி கூடங்­களில் டிரேஸ்­டு­கெ­தர் மற்­றும் சேஃப்என்ட்ரி தரவு விரி­வான முறை­யில் பதி­வு­ ஆகா­த­தால் அங்கு பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளை­யும் வாடிக்­கை­யா­ளர்­களை­யும் அடை­யா­ளம் காண முடி­ய­வில்லை.

கேடிவி கூடங்க­ளுக்­குச் சென்று அங்­குள்ள உப­ச­ரிப்­புப் பெண்­க­ளு­டன் நெருக்­க­மாக இருந்த வாடிக்­கை­யா­ளர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள இம்­மா­தம் 13ஆம் தேதி அழைப்பு விடுக்­கப்­பட்­டது. இம்­மா­தம் 13ஆம் தேதி வரை, 160 பேர் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­னர். அவர்­களில் 17 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

அடுத்த நாள் 501 பேர் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­ட­னர். அவர்­களில் எட்டு பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி­யா­னது. இம்­மா­தம் 15ஆம் தேதி, 1,003 பேர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள முன் வந்­த­னர். அவர்­களில் யாருக்­கும் கிரு­மித்­தொற்று இல்லை.

பாது­காப்பு வளை­யம் 3: கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருந்த பொது­மக்­கள் டிரேஸ்­டு­கெ­தர் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­னர். அவர்­களுக்கு சுகா­தார அமைச்சு சுகா­தார அபா­யம் குறித்த எச்­ச­ரிக்­கையை குறுஞ்­செய்தி மூலம் அனுப்­பி­யுள்­ளது அல்­லது அனுப்­பும்.

இந்த தனி­ந­பர்­கள் நிய­மிக்­கப்­பட்ட கொவிட்-19 பரி­சோ­தனை நிலை­யத்­தில் சட்­டப்­படி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். அதன் பின்­னர் முதலாவது பிசி­ஆர் பரி­சோ­தனை முடிவு கிடைக்­கும் வரை அவர்­கள் சுய தனி­மைப்­ப­டுத்­த­லில் இருக்க வேண்­டும்.

அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்று தெரிந்­தா­லும், அவர்­க­ளுக்­குள் கிரு­மி­யின் தாக்­கம் இருக்­கும் என்று சுகா­தார அமைச்சு கூறு­கிறது. ஆகவே, அவர்­கள் தங்­கள் வெளி­ந­ட­வ­டிக்­கை­களை 14 நாட்­க­ளுக்­குக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும். மிக­வும் அத்­தி­யா­வ­சி­ய­மாக இருந்­தால் மட்­டுமே அவர்­கள் வெளியே செல்­ல­லாம் என்று ஆலோ­சனை கூறப்­படு­கிறது.

இந்த தனி­ந­பர்­க­ளுக்கு அவர்­கள் முத­லா­வது பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும்­போது, என்­டி­ஜன் சுய பரி­சோ­த­னைக் கருவி­கள் வழங்­கப்­படும். அவர்­கள் அதி­லி­ருந்து ஏழா­வது நாளில் சுய­மாக பரி­சோ­தித்து தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

மேலும் 14வது நாள் நெருங்­கும்­போது அவர்­கள் நிர்­ண­யிக்­கப்­பட்ட பரி­சோ­தனை நிலை­யத்­தில் மற்­றொரு பிசி­ஆர் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள வேண்­டும். இது அவர்­க­ளுக்­குள் கிரு­மி­யின் தாக்­கம் இல்லை என்­பதை உறு­திப்­படுத்­தும்.

சுமார் 2,000 பேர் இந்­தப் பிரி­வில் உள்­ள­னர். இந்த தனி­ந­பர்­கள் கேடிவி கூடங்களுக்குச் செல்­லா­மல் இருந்­தி­ருக்­க­லாம். ஆனால், கேடிவி கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­தி­ருக்­க­லாம்.

பாது­காப்பு வளை­யம் 4: கேடிவி கூடங்கள் அல்­லது சிங்­கப்­பூர் போலிஸ் படை அடை­யா­ளம் காட்­டி­யுள்ள இது­போன்ற கூடங்­கள் உள்ள இடங்­க­ளுக்­குச் சென்­ற­வர்­களுக்கு சுகா­தார அமைச்சு சுகா­தார அபா­யம் குறித்த விழிப்­பு­நிலையை குறுஞ்­செய்தி மூலம் அனுப்­பி­யுள்­ளது அல்­லது அனுப்­பும்.

சுகா­தார அபா­யம் குறித்த எச்­ச­ரிக்கை போலல்­லா­மல், இந்த தனி­நபர்­கள் சட்­டப்­படி எது­வும் செய்ய தேவை­யில்லை. இருப்­பி­னும், அவர்­கள் அடுத்த 14 நாட்­க­ளுக்கு மற்­ற­வர்­க­ளு­டன் உள்ள தொடர்­பைக் குறைத்­துக்­கொள்ள வேண்­டும்.

அவர்­கள் சில்­லறை விற்­பனை மருந்­த­கங்­களில் விற்­கப்­படும் என்­டி­ஜன் சுய பரி­சோ­த­னைக் கரு­வி­களை வாங்கி, அதன் மூலம் அடுத்த 14 நாட்­க­ளுக்­குச் சுய பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

இந்­தப் பிரி­வில் சில ஆயி­ரம் பேர் இருக்­கக்­கூ­டும் என்­றும் சுகாதார அமைச்­சர் ஓங் விவ­ரித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!