காந்தி உணவகம்: நிர்வாகம் மாறினாலும் உணவின் சுவை மாறாது

இந்திய சமூகத்தின் பிரபலமான உணவகங்களில் ஒன்றாக கடந்த 50 ஆண்டு காலம் நியாயமான விலையில் அறுசுவை உணவு வழங்குவதற்கு பெயர் பெற்றது காந்தி உணவகம்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் காந்தி உணவகத்தின் நிர்வாகம் ‘கேஷுவரினா கறி’க்கு மாறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி உணவகம் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல இயங்கும் என்று நம்பிக்கையளித்தார் கேஷுவரினா கறி உணவகத்தின் உரிமையாளர் திரு இளங்கோ சுப்பிரமணியம்.

“நிர்வாகம் மட்டும்தான் மாறவுள்ளது. உணவகத்தின் பெயர், உணவின் தரம், விலை ஆகியவை வழக்கம்போல இருக்கும்,” என்று கூறினார் திரு இளங்கோ, 50.

சமூக ஊடகங்களில் காந்தி உணவகத்தின் நிர்வாக மாற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த வாரம் திங்கள் முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சந்தர் ரோட்டில் அமைந்துள்ள காந்தி உணவகம் புதுப்பிப்புப் பணிகளுக்கு மூடப்படும்.

அதற்கு பின்னர் வழக்கம்போல அது பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

காந்தி உணவகத்தின் பிரபலத்திற்கு அதன் முதலாளியும் தலைமை சமையல் நிபுணருமான திரு பக்கிரிசாமி சிதம்பரம் முதலியார் மூலக் காரணமாவார்.

ஓய்வுபெற திட்டமிட்டுள்ள திரு பக்கிரிசாமி, தற்போது உணவகத்தை வேறொரு நிர்வாகத்திற்கு விற்றது சிறந்த முடிவு என்றும் நிர்வாக மாற்றத்திற்கு பின்னரும் சிறிது காலம் கடையின் சமையலை வழிநடத்துவார் என்றும் உறுதியளித்தார் 79 வயதாகும் திரு பக்கிரிசாமி.

“புதிதாக எதுவும் செய்யாமல் பாரம்பரிய முறையில் சமைக்கிறோம். வழக்கமான சாப்பாடு என்றாலும் குறை இல்லாமல் சமைக்கிறோம். இதனால்தான் பல ஆண்டுகளாக நிறைய பேர் திருப்தியுடன் வந்து செல்கின்றனர்,” என்றார் திரு பக்கிரிசாமி.
வயது மூப்பு காரணமாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மகன் திரு ராஜ்மோகனின் உதவியில் உணவகத்தை வழிநடத்தி வருகிறார் திரு பக்கிரிசாமி.

“அப்பா 80 வயதை எட்டவுள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடினப்பட்டு உழைத்த அவர், இப்போது ஓய்வு எடுக்கும் காலம் வந்துவிட்டது. தற்போது உணவகத்தில் 12 ஊழியர்கள் உள்ளனர். சமையல், உணவக நிர்வாகத்தில் மேலும் சிறிது காலத்திற்கு வழிகாட்ட அவர் தொடர்ந்து இருப்பார்,” என்றார் திரு ராஜ்மோகன், 42.

மூன்று தலைமுறைகளாக காந்தி உணவகத்தின் உணவை விரும்பி நாடும் வாடிக்கையாளர்கள் கஃபூர் குடும்பத்தினர்.

“97 வயதான என் தந்தை முதல் 20 வயதான என் மகன் வரை அனைவரும் இன்று வரை காந்தி உணவகத்தின் உணவை விரும்பி சாப்பிடுகிறோம். சைவ, அசைவ சாப்பாடு இரண்டுமே சிறப்பாக இருக்கும். புதிய நிர்வாகம் தொடர்ந்து இந்தச் சுவையை நிலைநாட்டினால் நன்றாக இருக்கும்,” என்றார் ‘புரோப்நெக்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் திரு நிஸாம் கஃபூர், 54.

1993ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கட்டுமானத் துறையில் வேலை செய்ய வந்தபோது திரு தசரதன் பெருமாள் என்பவர் நிதி நெருக்கடியில் இருந்தார். அச்சமயத்தில் காந்தி உணவகத்தில் அவருக்கு ஒரு முழு வேளை சாப்பாடு, ஒரு வெள்ளி விலையில் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார் திரு தசரதன்.

“காந்தி உணவகம் வியாபாரத்திற்கு மட்டுமல்லாமல், தர்மத்திற்கும் இயங்குகிறது. இங்கு வந்த முதல் மாதத்தில் ஒரு நாளுக்கு இரண்டு வெள்ளிதான் சாப்பாட்டுக்கு செலவழிக்க முடியும். குறைந்த விலை என்றாலும் வயிறு நிறையும் சாப்பாட்டை வழங்கினர். இன்றுவரை அதைப் பற்றி என் குழந்தைகளிடம் சொல்வேன்,” என்றார் தற்போது சொத்து விற்பனை முகவராக உள்ள திரு தசரதன்.

“அடிக்கடி குடும்பம், நண்பர்களை அழைத்துச் செல்லும் இடமாக காந்தி உணவகம் உள்ளது. உணவு தரம் உட்பட வாடிக்கையாளர் சேவையும் அற்புதமாக இருக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் விலை நியாயமாக இருக்கும். நிர்வாகம் மாறினாலும் இந்த நற்சேவை தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்,” என்றார் திரு பிரஸ்டன் சாமுவேல், 26.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!