மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதோருக்கு மாறுபட்ட கட்டுப்பாடுகள்

நாளை மறு­தி­னம் முதல் மருத்­து­வ­ம­னை­களில் உள்­நோ­யா­ளிப் பிரி­வு­க­ளுக்­குள் வருகையாளர்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

ஆனால், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கும் போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்­கும் மாறு­பட்ட கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­த­வர்­ளும் உள்­நோ­யா­ளிப் பிரி­வுக்­குள் நுழைய கொவிட்-19 சோத­னையை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை. கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­த­வர்­க­ளி­டம் சோதனை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை என்­ப­தைக் குறிக்­கும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆவ­ணம் இருக்­க­வேண்­டும்.

அக்­டோ­பர் மாதம் ஒன்­றாம் தேதி முதல் ஒரு முறை மட்­டும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் கொவிட்-19 சோத­னையை மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். சோத­னை­யில் அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­க­வேண்­டும்.

இத்­த­கை­யோ­ருக்கு நாளை மறு­தி­னம் முதல் செப்­டம்­பர் மாதம் 30ஆம் தேதி வரை இந்த நிபந்­தனை கிடை­யாது.

எனி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர், நாளை மறு­தி­னம் முதல் தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்­பதை சோதனை மூலம் உறு­தி­செய்த பின்­னரே உள்­நோ­யா­ளிப் பிரி­வு­களுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

அதற்கு முன்பு 24 மணி­நே­ரத்­திற்­குள் அவர்­கள் 'ஏஆர்டி' அல்­லது 'பிசி­ஆர்' சோத­னை­களை மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும்.

எல்லா விருந்தாளிகளும் உள்நோயாளிப் பிரிவுகளில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள்தான் இருக்கலாம்.

உடல்நலம் மிகவும் மோசமாக உள்ள நோயாளிகளைப் பார்க்க ஐவர் ேபாகலாம்.

மற்ற நோயா­ளி­க­ளைப் பார்க்க இரு­வர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படு­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!