மோசடி: விழிப்புடன் இருக்கும்படி போலிசார் அறிவுறுத்தல்

நண்­பர்­க­ளா­கப் பாசாங்கு செய்து தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு பணம் கேட்­கும் மோச­டிக்­கா­ரர்­கள் குறித்து எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­கும்­படி பொது­மக்­க­ளுக்கு போலி­சார் அறி­வு­றுத்­து­கின்­ற­னர்.

தெரி­யாத எண்­கள் மூலம் தொடர்­பு­கொண்டு. "நான் யார் என்று தெரி­கி­றதா? என்னை ஞாப­கம் இல்­லையா?" என்று மோச­டிக்­கா­ரர்­கள் கேட்டு மக்­க­ளைக் குழுப்­பு­வ­தாக போலி­சார் நேற்று தெரி­வித்­த­னர்.

ஊகிக்­கும் முயற்­சி­யில் தங்­கள் நண்­பர்­க­ளின் பெயர்­களை ஒவ்­வொன்­றா­கச் சொல்­லும்­போது மோச­டிக்­கா­ரர்­கள் அதில் ஒரு பெய­ரைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­ற­னர். தமது கைபே­சி காணா­மல் போய்­விட்­டது அல்­லது கைபேசி எண்ணை மாற்­றி­விட்­ட­தாக மோச­டி­யில் ஈடு­ப­டு­ப­வர்கள் பொய் கூறி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

நம்­பி­ய­வர்­களைப் பிறகு இன்­னொரு முறை தொடர்­பு­கொண்டு நிதி நெருக்­க­டி­யைக் கார­ணம் காட்டி அவர்­க­ளி­டம் மோச­டிக்­

கா­ரர்­கள் கடன் கேட்­ட­தாக போலி­சார் கூறி­னர்.

குறிப்­பிட்ட சில வங்­கிக் கணக்குக­ளுக்குப் பணம் அனுப்பி­ வைக்­கும்­படி அவர்­கள் கேட்­டுக் ­கொள்­வர். அறிமுகம் இல்லா­த­வர்க­ளி­டமோ அல்­லது நேரில் சந்­திக்­கா­த­வர்­க­ளி­டமோ பணம் அனுப்ப வேண்­டாம் என்று

போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்­த­கைய மோச­டி­கள் குறித்து தக­வல் அறிந்­தோர் 1800-255-0000 எனும் எண் மூலம் போலி­சா­ரு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!