ஆப்கானிஸ்தான் நண்பர்கள் பற்றி சிங்கப்பூரர் கவலை

ஆப்­கா­னிஸ்­தா­னில் சுமார் 18 ஆண்­டு­க­ளாக வேலை செய்­த­வர் சிங்கப்­பூ­ரைச் சேர்ந்த மருத்­து­வர் வீ டெக் யங். 52 வய­தான அவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சிங்­கப்­பூர் திரும்­பி­னார்.

எனி­னும் ஆப்­கா­னிஸ்­தா­னில் உள்ள தனது நண்­பர்­க­ளு­டன் அவர் இன்­ன­மும் தொடர்­பில் இருக்­கி­றார்.

தலை­ந­கர் காபூலை தலி­பான் அமைப்பு கைப்­பற்­றி­ய­தைத் தொடர்ந்து அங்கு பலர் தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­வ­ரவே பயப்­படு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"பலர் பயந்து நடுங்­கு­கின்­ற­னர். தன்னை அல்­லது தனது குடும்­பத்­தாரை யாரே­னும் கொன்­று­விடுவார்­களோ என்று அவர்­கள் பயப்­படுகின்­ற­னர்," என்று அவர் சொன்­னார்.

2004ஆம் ஆண்­டில் அரசு சார்­பற்ற அனைத்­து­லக சுகா­தார அமைப்பு ஒன்­றுக்­குச் சுகா­தார, தொண்­டூ­ழி­யச் சேவை­களை வழங்க டாக்­டர் வீ ஆப்­கா­னிஸ்­தா­னின் பமி­யான் மாநி­லத்­திற்­குச் சென்­றார்.

சுமார் ஏழு ஆண்­டு­களுக்­குப் பிறகு அவர் காபூ­லுக்­குச் சென்­றார். அங்கு அவர் உள்­ளூர் வாசி­களில் ஒரு­வரா­கவே பல­ரால் ஏற்றுக்­கொள்ளப்­பட்­டார்.

கொவிட்-19 கிருமி உலகெங்கும் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து இன்னும் திருமணமாகாத அவர், தனது பெற்றோரின் அருகில் இருக்க சென்ற ஆண்டு சிங்கப்பூர் திரும்பினார்.

காபூலில் கிருமிப் பரவல் சூழல் மோசமாக இருந்ததும் அவர் நாடு திரும்பியதற்கு ஒரு காரணம்.

தான் ஆப்­கா­னிஸ்­தா­னில் இல்­லா­விட்­டா­லும் அங்­கி­ருக்­கும் தனது நண்­பர்­க­ளைப் பற்றி டாக்­டர் வீ நினைக்­காத நாளில்லை.

குடும்­பத்­தா­ருக்கு உணவு வாங்க வெளியே செல்­லக்­கூட நண்­பர்­கள் பயப்­ப­டு­வ­தா­கச் சொன்­னார்.

தலி­பான் காபூலை நெருங்கி வந்­து­கொண்­டி­ருந்­போது, தாங்­கள் உயி­ரு­டன் இருப்­போமா, எப்­போது நக­ரில் வெடி­குண்­டுத் தாக்­கு­தல் நடக்­கும் போன்ற சிந்­த­னை­கள் நண்­பர்­களை வாட்­டி­ய­தாக டாக்­டர் வீ கூறி வருத்­தப்­பட்­டார்.

ஆப்­கா­னிஸ்­தான் அடுத்த கட்­டத்­திற்கு நல்­ல­ப­டி­யா­கச் செல்ல அனைத்­து­லக அமைப்­பு­கள் ஏதே­னும் செய்­யும் என்ற நம்­பிக்­கை­யைத் தான் கொண்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!