மோசடி தடுப்பில் முன்னேற்றம்

மோச­டி­க­ளைத் தவிர்க்க உத­வும் 'ஸ்கேம்­ஷீல்ட்' செயலி சுமார் 8,600 தொலை­பேசி எண்­க­ள் முடக்கப்பட்டுள்ளதாக உள்­துறை அமைச்­சுக்­கான துணை­ய­மைச்­சர் டெஸ்­மண்ட் டான் தெரி­வித்­துள்­ளார். அதோடு, இச்செய­லி­யின் வாயி­லாக சுமார் 1.4 மில்லியன் குறுஞ்­செய்­தி­க­ளைப் பற்­றிப் புகார் கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

உள்­துறை அமைச்­சின் நடத்தை அறி­வி­யல் நிலை­யம் ஏற்­பாடு செய்த இணை­யக் கலந்­து­ரை­யா­ட­லில் திரு டான் இத­னைத் தெரி­வித்­தார்.

பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­களுடன், கல்வித் துறை, நிதி, இணைய வர்த்­த­கம் ஆகி­ய துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர்.

மோசடி செய்­ப­வர்­கள் பயன்­படுத்தும் உயர்­தர உத்­தி­கள், மோசடி­க­ளைத் தவிர்க்க அர­சாங்க அமைப்­பு­களும் இதர துறை­யி­ன­ரும் எடுத்­து­வ­ரும் முயற்­சி­கள், மோசடி­யில் சிக்­கா­மல் இருக்­க பொது­மக்­கள் என்ன செய்­ய­லாம் போன்ற அம்­சங்­க­ளைப் பற்றி கலந்து­ரை­யா­ட­லில் பேசப்­பட்­டது.

மோச­டி­க­ளைத் தவிர்க்க எடுக்கப்­படும் முயற்­சி­களில் அதி­கா­ரி­கள் நல்ல முன்­னேற்­றம் கண்டுள்­ள­தா­க திரு டான் தமது தொடக்க உரை­யில் குறிப்­பிட்­டார். அத்தகைய முயற்­சி­களில் 'ஸ்கேம்­ஷீல்ட்' செயலி ஒன்று என்று அவர் சொன்­னார். இச்­செ­ய­லி­யைத் தற்­போது 'ஆப்­பிள்' சாத­னங்­களில் மட்­டும் பயன்­படுத்­த­மு­டி­யும்.

'ஆண்ட்­ராய்ட்' சாத­னங்­க­ளுக்­கான செய­லி­யும் தற்­போது உருவாக்கப்­பட்டு வரு­கிறது.

செயற்கை நுண்­ண­றி­வைக் கொண்டு 'ஸ்கேம்­ஷீல்ட்' செயலி, மோசடி குறுஞ்­செய்தி­களை அடை­யா­ளம் கண்டு அகற்றும்.

மோச­டிக்­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்து வரும் தொலை­பேசி அழைப்­பு­களைத் தடுக்­கும்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை­ய­மைச்­ச­ரு­மான திரு டான், 'ஸ்கேம்­ஷீல்ட்' செயலி குறைந்­தது 200,000 முறை பதி­வி­றக்­கம் செய்யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

மோசடிச் செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் முக்கிய அமைப்பான 'ஏஎஸ்டி' எனப்படும் காவல்துறையின் மோசடி ஒழிப்புப் பிரிவு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டதையும் அவர் சுட்டினார்.

மோசடி ஒழிப்புப் பிரி­வின்­கீழ் இயங்­கும் மோசடி ஒழிப்பு நிலையம், இந்த ஆண்டு முற்­பா­தி­யில் மட்­டும் மோச­டிச் செயல்­களில் பறி­போ­க­வி­ருந்த 66 மில்­லி­யன் வெள்­ளித் தொகையை மீட்­ட­தாக அவர் சொன்னார்.

பல மோச­டிச் செயல்­களில் வெளி­நாட்­ட­வர் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­ற­னர்.

அத­னால் இப்­பி­ரவு வெளி­நா­டு­களில் சட்­டத்தை நிலை­நாட்­டு­வோரு­ட­னும் இணைந்து செயல்­படு­வ­தா­க திரு டான் கூறி­னார்.

8,600 தொலைபேசி எண்கள் முடக்கம், 1.4 மில்லியன் குறுஞ்செய்திகள் பற்றி புகார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!