எம்ஆர்டி நிலையங்களில் முகக்கவசம் அணியாதோரை அடையாளம் காட்டும் கண்காணிப்புக் கருவி

எம்­ஆர்டி நிலை­யங்­களில் முகக்­க­வ­சம் அணி­யா­மல் செல்­வோர், தனி­யா­கக் கிடக்­கும் பெட்டி, பைகளை அடை­யா­ளம் காண்­ப­தற்கு நவீன தொழில்­நுட்­பத்­தி­லான கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படு­கின்­றன.

முதற்­கட்­ட­மாக ஐந்து எம்­ஆர்டி நிலை­யங்­களில் இந்த கண்­கா­ணிப்­புப் புகைப்­ப­டக்­க­ரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. ஊட்­ரம் பார்க், சைனா­ட­வுன், டோபி­­காட், லிட்­டில் இந்­தியா மற்­றும் சிராங்­கூன் ஆகி­யவை அந்த ஐந்து நிலை­யங்­கள்.

இந்த வசதி அடுத்த ஆண்­டுக்­குள் டௌன்­ட­வுன் நிலை­யச் சந்­திப்­பு­க­ளி­லும் பொருத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதி­தா­கப் பொருத்­தப்­படும் கேம­ராக்­கள் ஏற்­கெ­னவே எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிலை­யங்­களில் பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் இருந்து கிடைக்­கப்­பெறும் படங்­களை ஆய்­வு­செய்­யும்.

இந்த நவீ­னக் கண்­கா­ணிப்­புக் கருவிக் கட்­ட­மைப்பு பிரான்ஸ் நாட்­டின் 'தேல்ஸ்' என்­னும் நிறு­வ­னத்­தால் தயா­ரிக்­கப்­பட்­டது. இந்­தக் கரு­வியைத் தயா­ரிக்­கும் பணி­யில் அந்­நி­று­வ­னம் கடந்த 18 மாதங்­களாக ஈடு­பட்டு வந்­தது.

பொதுப்­போக்­கு­வ­ரத்­தில் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தை­யும் பய­ணி­க­ளுக்கு இனிய பயண அனு­ப­வத்­தைத் தரு­வ­தை­யும் எஸ்­பி­எஸ் டிரான்­சிஸ்ட் இலக்­கா­கக் கொண்­டுள்­ளது என்று அந்­நி­று­வ­னத்­தின் மூத்த துணைத்­த­லை­வர் ஜெஃப்ரி சிம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

புதிய கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­கள் பொருத்­தப்­ப­டு­வ­தோடு ஏற்­கெ­னவே பணி­யில் உள்ள நிலைய ஊழி­யர்­களும் தங்­கள் பணி­யில் தொடர்­வர் என்­றார் திரு ஜெஃப்ரி. இவர் வடக்கு-கிழக்­குத் தடம், செங்­கால்-பொங்­கோல் எல்­ஆர்டி ஆகிய தட மேம்­பாட்­டுப் பிரி­வின் தலை­வ­ரா­க­வும் பதவி வகிக்­கி­றார்.

ரயில் நிலை­யங்­களில் பய­ணி­களைக் கண்­கா­ணிக்க இப்­போது நிலைய ஊழி­யர்­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­ப­டு­வ­தோடு சிசி­டிவி கண்­கா­ணிப்­புக் கருவி மூலம் நிலை­யத்­தின் நிலை­மை­யைக் கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர்.

புதிய கண்­கா­ணிப்­புக் கரு­வி­யால் முகக்­க­வ­சம் அணி­யாத பய­ணி­கள், தனி­யா­கக் கிடக்­கும் பய­ணப்­பை­கள் போன்­ற­வற்றை நிலைய ஊழி­யர்­கள் எளி­தில் அடை­யா­ளம் காண­மு­டி­யும் என்­றும் அவர் கூறி­னார். எம்­ஆர்டி நிலை­யங்­களில் கூட்ட நெரி­சலை அள­விடும் வச­தி­யை­யும் இந்­தப் புதிய கருவி பெற்­றுள்­ளது.

இது­கு­றித்து கடந்த மார்ச் மாதம் ஊட்லீ நிலை­யத்­தில் சோதனை செய்­து­பார்க்­கப்­பட்­டது.

ஒவ்­வொரு நாளும் வெவ்­வேறு நேரங்­களில் ரயில் நிலை­யங்­களில் கூட்ட நெரி­சல் குறித்த தர­வு­க­ளை­யும் இந்­தக் கருவி பதிவு செய்­யும்.

கூட்­டம் அள­வுக்கு மீறி­னால், அந்­தக் கருவி நிலைய ஊழி­யர்­களுக்கு கூட்­டம் குறித்து எச்­ச­ரிக்கை விடுக்­கும் என்று திரு ஜெஃப்ரி விளக்­கி­னார்.

சில நேரங்­களில் பய­ணி­களில் ஒரு­வர் மயக்­க­ம­டை­தல் போன்ற சம்­ப­வங்­கள் நிக­ழும்போது அவ்­வி­டத்­தில் கூடும் கூட்­டம் குறித்து உட­ன­டி­யாக ஊழி­யர்­க­ளுக்கு இக்­க­ருவி தக­வல் அளிக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!