போதுமான ‘ஏஆர்டி’ கருவிகள் இருப்பில் உள்ளன

அதி­க­ரித்து வரும் விரைவுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) கரு­வி­க­ளின் தேவை­யைச் சமாளிக்­கப் பல மாதங்­க­ளுக்­குத் தேவையான கருவிகள் இருப்­பில்­ உள்­ள­தா­க­வும் வாரா வாரம் புதிய கருவிகள் தருவிக்கப்படுவதாகவும் விநி­யோ­கிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

வாடிக்­கை­யா­ளர்­கள் ஏஆர்டி கரு­வி­களை முண்டி­ய­டித்­துக்­வாங்­கி­ய­தால் பல மருந்­த­கங்­க­ளில் ஏஆர்டி பரிசோதனை கருவிகள் தீர்ந்துபோனதையடுத்து இந்த அறி­விப்பு வந்­துள்­ளது.

'எஸ்­பிடி சைன்­டி­ஃபிக்'கின் நிர்வாக இயக்­கு­ந­ரான திரு­வாட்டி ஜெஸ் லிம் தமது நிறு­வ­னத்­தின் கிடங்கு 20 மில்­லி­யன் ஏஆர்டி கரு­வி­க­ளைச் சேமிக்கும் வசதி கொண்டது என ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார். மேலும், அக்­க­ரு­வி­க­ளுக்­கான தேவை­கள் மும்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் வாரந்தோறும் சில மில்­லி­யன் ஏஆர்டி கரு­வி­கள் பெறப்படுவதாக வும் ­அவர் கூறி­னார்.

'பிடி' நிறு­வ­னத்­தின் பிர­தி­நிதி, தங்­க­ளா­லும் எந்த சிர­ம­மும் இன்றி அதி­க­ரித்து வரும் தேவை­க­ளை எதிர்கொள்ள முடி­யும் என்று கூறி­னார். ஏஆர்டி கரு­வி­கள் சில மாதங்­க­ளுக்­குப் பிறகு காலா­வ­தி­யா­கி­விடும் என்­றும் இத­னால் சரி­யா­கத் திட்­ட­மிட்டு இறக்­கு­மதி செய்ய வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

மேலும் அதி­க­ரித்து வரும் நோய்த்­தொற்று சம்­ப­வங்­க­ளி­னால் சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்ள மக்­க­ளி­டையே ஏஆர்டி கரு­வி­களின் தேவை அதி­க­ரித்­துள்­ளது என்­றார்.

'கார்­டி­யன்'னின் பிர­தி­நிதி புதிய கருவிகள் இந்த வார­மும் அடுத்த வார­மும் தங்­களை வந்­த­டை­யும் என்­றும் தங்­க­ளது ஊழி­யர்­கள் மக்­கள் கரு­வி­களை வாங்க வாங்க தேவையான கருவிகள் வரவழைக்கப்படும் என்றும் கூறினார். முன்­வைக்­கப்­படும் திட்­டங்­க­ளுக்கு ஏற்ப, போது­மான கருவிகள் உள்­ளதை உறு­தி­ப­டுத்த சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தா­கத் திரு­வாட்டி லிம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!