பொதுத்துறை கட்டுமான ஒப்பந்தப்புள்ளிகளில் மாற்றம்

கொவிட்-19 போன்ற கொள்­ளை­நோய்­க­ளால் ஏற்­படும் இடர்ப்­பா­டு­களைக் கருத்­தில்­கொண்டு பொதுத்­துறை கட்­டு­மா­னங்­கள் தொடர்­பான ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் சமர்ப்­பிப்­ப­தில் வரும் நவம்­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரப்­பட உள்­ளன.

தொற்­று­நோய் கார­ண­மாக ஒப்­பந்­த­தா­ரர்­கள் கால நீட்­டிப்­புக்கு விண்­ணப்­பிக்க அனு­மதி, ஒப்­பந்­தப்­புள்­ளி­யைச் சமர்ப்­பிக்­கும் நேரத்­தில், காலம் அல்­லது செலவு, அறி­யப்­ப­டாத தொற்­று­நோய் தொடர்­பான செல­வு­க­ளுக்­கான குத்­து­ம­திப்­பான தொகையை உள்­ள­டக்­கு­வது போன்­றவை முக்­கிய திருத்­தங்­களில் சில.

இந்த மாற்­றங்­கள் செப்­டம்­பர் 23ஆம் தேதி­யிட்ட கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் சுற்­ற­றிக்­கை­யில் இடம்­பெற்­றுள்­ளன.

கட்­டு­மா­னத் தொழில்­துறை செலவு அதி­க­ரிப்­பை­யும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யை­யும் எதிர்­கொள்­ளும் நேரத்­தில் இந்த அறி­விப்பு வெளி­வந்­துள்­ளது.

தனி­யார், பொதுத் துறை பங்­கா­ளி­களை உள்­ள­டக்­கிய ஒரு பணிக்­குழு இந்­தப் பரிந்­து­ரை­களைச் செய்­துள்­ளது.

கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு இடையே, புதிய கட்­டு­மா­னம், ஆலோ­சனை தொடர்­பான ஒப்­பந்­தப்­புள்­ளி­களில் கட்­டு­மா­னத் திட்டத்தை மேற்­கொள்­ளும் பங்­காளி­க­ளி­டையே, இடர்ப்­பா­டு­களை சம­மாகப் பகிர்­வ­தற்­காக உத்­தி­களைக் கருத்­தில்­கொண்டு இப்­பரிந்­து­ரை­கள் உரு­வாக்­கப்­பட்டுள்ளன.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யம், சிங்­கப்­பூர் சொத்­துச் சந்தை மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் கட்­டு­மான ஒப்­பந்­த­தா­ரர்­கள் சங்­கம் ஆகி­யோ­ரால் இணைந்து செயல்­படுத்­தப்­படும் இந்­தக் குழு பிப்­ர­வ­ரி­யில் கூடியது.

"கொவிட்-19 எதிர்­பார்க்­கப்­ப­டாத நிகழ்வு. தனி­யார், பொதுத் துறை­களில் பயன்­ப­டுத்­தப்­படும் பொது­வான கட்­டு­மான ஒப்­பந்­தப்­புள்­ளி­யில், கொள்­ளை­நோய்ப் பர­வல் போன்ற இடர்ப்­பா­டு­க­ளின்­போது, கால நீட்­டிப்­புக் கோரிக்கை, இழப்பு, செல­வு­கள் போன்றவற்றுள் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளின் கோரிக்­கை­களை மதிப்­பி­டு­வ­தற்கு போது­மான வழி­முறை இல்லை," என்று கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் சுற்­ற­றிக்கை குறிப்­பிட்­டுள்­ளது. சிங்­கப்­பூர் கட்­டு­மா­னத் துறை­யில், பொது­வாக பயன்­ப­டுத்­தப்­படும் கட்­டு­மான ஒப்­பந்­தப்­புள்­ளி­களில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட இந்த மாற்­றங்­களைச் சேர்க்­கு­மாறு பணிக்­குழு கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

பாது­காப்பு மேலாண்மை நட­வடிக்­கை­கள் போன்ற கிரு­மித்­தொற்று பர­வு­வ­தைத் தடுப்­ப­தற்­காக ஒப்­பந்­த­தா­ரர்­கள் செயல்­ப­டுத்த வேண்­டி­வ­ரும் நட­வ­டிக்­கை­க­ளால் ஏற்­படும் தாம­தங்­கள், தற்­போது கால நீட்­டிப்பு கோரிக்­கைக்­கான அடிப்­ப­டை­களில் அடங்­கும்.

கொள்­ளை­நோய்ப் பர­வல் அல்­லது அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­திய நட­வ­டிக்­கை­க­ளி­னால் ஏற்­படும் இழப்பு மற்­றும் செல­வு­க­ளுக்­கான இணைப் பகிர்­வுக் கொள்­கை­களும் திருத்­தங்­களில் சேர்க்கப்பட்­டுள்­ளன. இது வழங்­கப்­பட்ட ஒப்­பந்­தப்­புள்­ளி­யில் அதி­க­பட்­சம் 5 விழுக்­கா­டாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­னு­ரைக்­கப்­பட்ட அதி­க­பட்ச பகிர்வு அள­வை­யும் தாண்டி கூடு­தலாக செல­வு­கள் அதி­க­ரித்­தி­ருந்­தால் ஒப்­பந்­தக்­கா­ரர் இந்த அளவை பரி­சீ­லனை செய்­ய­லாம்.வரும் நவம்­பர் முதல் தேதி அல்­லது அதற்­குப் பிறகு விடப்­படும் ஒப்­பந்­தப்­புள்­ளி­க­ளுக்­கான நடை­முறை­களை அரசு முக­வை­கள் பின்­பற்­றும் என்­றும் தயா­ராக உள்ள முக­வை­கள் இந்த நடை­மு­றை­களை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தும் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!